காதலிக்க மறுத்த பெண்ணை வெட்டிக் கொன்ற வாலிபர்
நாங்குநேரி:
தன்னைக் காதலிக்க மறுத்த கல்லூரிப் பெண்ணை வெட்டிக் கொலை செய்தார் வாலிபர். திருநெல்வேலி அருகே நாங்குநேரியில் இந்த பதைபதைக்கும் சம்பவம் நடந்தது.
இங்குள்ள மூலக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் சுகாசினி (வயது 19). இவர் பாளையம்கோட்டை பெண்கள் கல்லூரியில் பி.எஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இவரது ஊரைச் சேர்ந்தவர் சுந்தர் (22).
வேலையேதும் இல்லாத இந்த வாலிபர் சுகாசினியை ஒரு தலையாகக் காதலித்துள்ளார். இந்தக் காதலை கடந்த வாரம் சுந்தர் கூறியபோது அதை ஏற்க சுகாசினி மறுத்துள்ளார்.
இந் நிலையில் இன்று காலை சுகாசினியின் வீட்டுக்கே சென்ற சுந்தர், தன்னைக் காதலிக்குமாறு மிரட்டியுள்ளார். சுகாசினி மறுக்கவே, கையோடு கொண்டு வந்த அரிவாளால் சுகாசினியை கழுத்தில் வெட்டினார்.
இதில் அந்த இடத்திலேயே சுகாசினி துடிதுடித்து இறந்தார். இதையடுத்து தனது வீட்டுக்கு ஓடிய சுந்தர் வீட்டில் தயாராக வைத்துவிட்டு வந்த விஷத்தை எடுத்துக் குடித்து மயங்கி விழுந்தார். இப்போது ஆபத்தான நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வீட்டில் வைத்து இளம்பெண் வெட்டிக் கொல்லப்பட்டது அப் பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications