நாடளுமன்றம் செல்ல அனுமதி: வைகோ வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு
சென்னை:
பொடா மறு ஆய்வுக் குழுவுக்கு அதிக அதிகாரம் வழங்குவது தொடர்பாக நாடாளுமன்றம் நடைபெறவிருக்கும்விவாதத்தில் பங்கேற்க அனுமதியளிக்கக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்துள்ள மனுமீதான தீர்ப்பு நாளை மறுநாள் வழங்கப்படுகிறது.
இந்த மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இன்று இந்த வழக்கில் நடந்த விசாரணையின்போது பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் ஜெயக்குமார், வைகோமீதான பொடா வழக்கு விசாரணையில் இருக்கும்போது நாடாளுமன்றம் செல்ல அவருக்கு அனுமதிஅளிக்கப்பட்டால் , இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வழக்கை அவர் சீர்குலைக்க வழி உள்ளது. எனவே அவர்நாடாளுமன்றத்தில் பங்கேற்க அனுமதி வழங்கக்கூடாது என்றார்.
இந்த மனு மீதான விசாரணையில் வைகோ தானே வாதாடினார். வழக்கறிஞர் நாற்காலியில் உட்கார்ந்திருந்தவைகோ ஜெயக்குமாரின் வாதத்திற்கு பதிலளித்தார். அவர் பேசும்போது, நான் நாடாளுமன்றம் செல்வது என்மீதுள்ள பொடா வழக்குப் பற்றி பேசுவதற்கு அல்ல. அங்குள்ளவர்கள் இந்த வழக்கின் சாட்சிகளும் அல்ல.
என்னுடைய ஜனநாயக உரிமையை நிலைநாட்டவும், பொடா குறித்த விவாதத்தில் பங்கு கொள்ளவும் நான்விரும்புகிறேன். எனவே எனக்கு அனுமதியளிக்க வேண்டும் என்றார்.
இதனையடுத்து பொடா சட்ட விதிகள் பற்றி விதிமுறைகள் குறித்த வைகோவுக்கும், ஜெயக்குமாருக்கும் நடந்தவாக்குவாதத்தில், திடீரென்று ஜெயக்குமார் வைகோவைப் பார்த்து நாடாளுமன்ற விதிமுறைகள் பற்றி தெரியாதவர்என்று குற்றம் சாட்டினார்.
இதனால் கோபமடைந்த வைகோவின் வழக்கறிஞர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அரசு தரப்பு வழக்கறிஞரைப்பார்த்து கூச்சல் எழுப்பினர். அவர்களை அமைதிப்படுத்திய வைகோ, என்னை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதேஇந்த வழக்கறிஞருக்கு வேலையாகப் போய்விட்டது.
வழக்கு விசாரணையைப் பற்றி மட்டும்தான் அவர் பேச வேண்டும். என்னைப் பற்றி விமர்சிப்பதற்கு அவருக்குஎந்த உரிமையும் கிடையாது. எனது பொது வாழ்க்கையில் இது போன்ற ஒரு அவமானத்தை முதல் முறையாக இந்தநீதிமன்றத்தில் சந்திக்கிறேன். இருப்பினும் இந்த நீதிமன்றத்தை நான் மதிக்கிறேன்.
எனக்கும் சட்ட விதிமுறைகள் தெரியும். நாடாளுமன்றம் செல்வதற்குத் தான் அனுமதி கேட்கிறேனே தவிரவீட்டிற்கு செல்வதற்கு அல்ல என்று வேதனையாக வைகோ கூறினார்.
இடையே குறுக்கிட்டுப் பேச முயன்ற அரசு தரப்பு வழக்கறிஞரை உட்காருமாறு உத்தரவிட்ட நீதிபதி ராஜேந்திரன்.நீங்கள் (வைகோ) இதற்காக வருத்தப்பட வேண்டாம். தீர்ப்பை நாளை மறுதினம் வழங்குவேன் என்றுஅறிவித்தார்.
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications