சொத்து குவிப்பு வழக்கு: ஜெ மனு மீது உச்ச நீதிமன்றம் 15ம் தேதி விசாரணை
டெல்லி:
சொத்துக் குவிப்பு வழக்கை பெங்களூரிலிருந்து புதுவைக்கு மாற்றக் கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
காவரி நதி நீர்ப் பிரச்சனை தொடர்பாக இரு மாநில உறவுகளும் பாதிப்படைந்துள்ள நிலையில் பெங்களூரில் இந்தவழக்கை விசாரணை நடந்தால் தனக்கு பாதுகாப்பு இருக்காது எனவும், விசாரணை நியாயமான முறையில்நடப்பதற்குச் சாத்தியமில்லை எனவும் கூறிய ஜெயலலிதா வழக்கை பாண்டிச்சேரிக்கு மாற்ற வேண்டும் என்றுவழக்கறிஞர் வைத்தியநாதன் மூலம் மனுத் தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த நீதிபதி வைரவா மற்றும் நீதிபதி சேமா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த மனுவை தலைமைநீதிபதி கரேயிடம் முறையிடுமாறு பரிந்துரைத்தது. இதனையடுத்து தலைமை நீதிபதி கரேவிடம் மனுத்தாக்கல்செய்யப்பட்டது.
கரே வழக்கின் தன்மையை ஆராயுமாறு நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தலைமை நீதிபதிகரே தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்ச் வரும் திங்கள்கிழமை இந்த மனுவைவிசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக இன்று அறிவித்தது.












Click it and Unblock the Notifications