வங்கக் கடலில் புயல் சின்னம்: தமிழகத்தில் மழை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வங்கக் கடலில் தமிழகத்தை ஒட்டி புயல் சின்னம் உருவாகியுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த மழை சரி வரப் பெய்யவில்லை. இதனால் பெரும் பாசன நீர், குடிநீர்ப் பற்றாக்குறையை தமிழகம் எதிர்நோக்கியுள்ளது.
இந் நிலையில் இந்த புயல் சின்னம் உருவாகியுள்ளது.
சென்னைக்கு தென் கிழக்கே 1,200 கி.மீ. தூரத்தில் இந்த குறைந்தக் காற்றழுத்த மண்டலம் மையம் கொண்டுள்ளது. அது தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால், மேக மூட்டம் சூழ்ந்து வருகிறது.
இதனால் அடுத்த 48 மணி நேரம் மிதமானது முதல் பலத்த மழை வரை பெய்யலாம் என நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications