சென்னை வந்தார் அப்துல் கலாம்: அணு விஞ்ஞானிகளுடன் ஆலோசனை
சென்னை:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நேற்று இரவு சென்னை வந்து சேர்ந்தார். இன்று சென்னை மற்றும்கல்பாக்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். பின்னர் அணு விஞ்ஞானிகளுடன் தனியேமுக்கிய ஆலோசனைகளில் ஈடுபடுகிறார்.
இந்திய விமானப்படை விமானம் மூலம் நேற்று இரவு 10.20 மணிக்கு சென்னை வந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாமை, முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், ஜெயக்குமார்,பொன்னையன், முப்படைதலைமை அதிகாரிகள், டிஜிபி கோவிந்த், தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் வெங்கடேசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
விமான நிலைய வரவேற்புக்குப் பின்னர் அப்துல் கலாம் ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அங்கு இரவுஓய்வெடுத்த அவர் இன்று காலை சென்னையை அடுத்துள்ள காலவாக்கத்தில் உள்ள சிவசுப்ரமணிய நாடார்பொறியியல் கல்லூரி (இது, பிரபல சாப்ட்வேர் நிறுவனமான எச்.சி.எல். நிறுவன அதிபர் சிவ் நாடாரின்பொறியியல் கல்லூரி) மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.
அதன் பின்னர் கல்பாக்கம் செல்லும் கலாம் அங்கு அணு எரிபொருள் சுழற்சி முறை குறித்த மாநாட்டைத் தொடங்கிவைக்கிறார். இதையடுத்து அணு விஞ்ஞானிகளுடன் முக்கிய ஆலோசனைகளில் ஈடுபடுகிறார்.
பிறகு போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் மருந்தாளுநர்கள் மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். பிறகுசென்னை நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில், சென்னை நிர்வாகவியல் கழக பட்டமளிப்பு விழாவில்பங்கேற்கிறார்.
இந் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இரவு மீண்டும் டெல்லி திரும்புகிறார். கலாம் வருகையையொட்டி சென்னைமற்றும் கல்பாக்கத்தில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications