வீரப்பனை பிடிக்க இஸ்ரேல் உதவி நாடப்படும்: கர்நாடக டிஜிபி
குல்பர்கா:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க இஸ்ரேல் நாட்டின் உதவி நாடப்படும் என்று கர்நாடக டிஜிபி மடியாள்கூறியுள்ளார்.
இது தொடர்பாக நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
வீரப்பனைப் பிடிக்க கர்நாடக அதிரடிப்படையினர் பெரும் முயற்சி செய்து வருகின்றனர். வீரப்பனைப் பிடிக்கஇஸ்ரேல் பாதுகாப்பு ஏஜென்சியின் உதவியை நாடும் வாய்ப்புள்ளது.
தமிழக அதிரடிப்படைக்கும், வீரப்பன் கும்பலுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏதும் நடைபெறவில்லை.தமிழக அதிரடிப் படைக்கும், வேட்டைக்காரர்களுக்கும் இடையேதான் துப்பாக்கிச் சண்டை நடந்தது என்றார்.
கடந்த மாதம் கர்நாடக அதிரடிப் படை வீரப்பனைச் சுற்றி வளைத்துள்ளதாகவும், இரு தரப்பினருக்கும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதாகவும் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா கூறியதை, தமிழக அதிரடிப் படையினர்மறுத்தனர்.
இப்போது வீரப்பனுக்கும், தமிழக அதிரடிப் படைக்கும் சண்டை நடந்தாக வந்த செய்தியை கர்நாடக போலீஸ்டிஜிபி மறுத்துள்ளார். வீரப்பனுடன் சண்டை நடக்கிறதோ இல்லையோ, தமிழக அதிரடிப் படைக்கும், கர்நாடகஅதிரடிப் படைக்கும் இடையே தவறாமல் அறிக்கைப் போர் நடந்து வருகிறது.
இந் நிலையில் கர்நாடக அதிரடிப் படைத் தலைவராக இருந்த ஜோதி பிரகாஷ் மிர்ஜி மாற்றப்பட்டு, அவருக்குப்பதிலாக இதுவரை கூடுதல் டிஜிபி பதவி வகித்து வந்த பிரகாஷ் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications