போலி மருத்துவக் கல்லூரி நடத்திய தாய், மகள் கைது
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் போலி துணை மருத்துவக் கல்லூரியை நடத்திய தாய் மற்றும் மகளை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
திண்டுக்கல்லில், தேசிய துணை மருத்துவ அறிவியல் கழகம் என்ற பெயரில் ஒரு பாரா மெடிக்கல் கல்லூரிதொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரியின் முதல்வராக பாத்திமா என்பவரும், அவரது தாய் தாரா என்பவர்தாளாளராகவும் செயல்பட்டனர்.
இந்தக் கல்லூரியில் திண்டுக்கல் மற்றும் கொடைக்கானலைச் சேர்ந்த 8 மாணவிகள் சேர்ந்துள்ளனர். இவர்களிடம்நன்கொடையாக ஏராளமான பணத்தைப் பெற்றுக் கொண்ட தாராவும், பாத்திமாவும் வகுப்புகளைத்தொடங்கவில்லை. மாணவிகள் வற்புறுத்தியதைத் தொடர்ந்து ஏனோதானோவென்று வகுப்புகளைநடத்தியுள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த மாணவிகள் தங்களது பணத்தைத் திருப்பித் தரும்படியும், தாங்கள் கல்லூரியை விட்டுவிலகுவதாவும் கூறியுள்ளனர். ஆனால் பணத்தைத் தர மறுத்த தாரா கூடுதலாக பணம் கேட்டுள்ளார்.அதைக்கொடுக்காவிட்டால் உங்களது பள்ளிச் சான்றிதழ்களைத் தர மாட்டேன் என்றும் மிரட்டியுள்ளார்.
இதையடுத்து 8 மாணவிகளும் போலீஸில் புகார் கொடுத்தனர். புகாரையடுத்து விசாரணை நடத்திய போலீஸார்,கல்லூரிக்கு அங்கீகாரம் இல்லாததைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து, தாயையும்,மகளையும் கைது செய்தனர்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications