பொடாவை ஆயுதமாக பயன்படுத்தும் தமிழக அரசு: உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
டெல்லி:
நக்கீரன் கோபால் தொடர்பான மனுவை உடனடியாக விசாரிக்குமாறு தமிழக அரசின் கோரிக்கை மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பொடா சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து தமிழக அரசின்வழக்கறிஞர் வைத்தியலிங்கம் இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் வழக்கு தொடர்பானமனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதை உடனடியாக விசாரித்து, கோபால் மீதான விசாரணையைத்தொடங்க வகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் ஏ.ஆர்.லட்சுமணன், ராஜேந்திர பாபு, மாத்தூர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. பின்னர்இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் கூறுகையில், பொடா என்ற சட்டத்தை தனது ஆயுதமாக கொண்டு தமிழக அரசு செயல்படுவதாகத்தெரிகிறது. பொடா சட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டு நீதிமன்றத்தில் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம்என்று தமிழக அரசு நினைத்துக் கொண்டுள்ளது போலும்.
கோபால் மனு எப்போது விசாரணைக்கு வருகிறதோ அப்போதுதான் விசாரிக்கப்படும். தமிழக அரசின்அவசரத்திற்காக மனுவை விசாரிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications