தமிழக கடற்கரை நெடுகிலும் கடல்நீரைக் குடிநீராக மாற்றும் நிலையங்கள் அமைக்க அரசு திட்டம்
சென்னை:
தமிழ்நாட்டின் கடற்கரை நெடுகிலும் கடல்நீரைக் குடிநீராக மாற்றும் நிலையங்கள் அமைத்து, மக்களின் குடிநீர்ப்பிரச்சனையைத் தீர்க்கப் போவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று கூறியுள்ளார்.
கல்பாக்கம் இந்திரா காந்தி அணு மின் நிலையத்தில் நடந்த அணு மின் உலை எரிபொருள் சுழற்சி குறித்தமாநாட்டை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு முதல்வர் ஜெயலலிதா முன்னிலைவகித்தார். அப்போது பேசிய ஜெயலலிதா, கல்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளதுபோல், தமிழக கடற்கரைநெடுகிலும் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களை அமைக்கப் போவதாக தெரிவித்தார்.
இதையடுத்து அணு விஞ்ஞானிகளுடன் கலாம் முக்கிய ஆலோசனைகளில் ஈடுபடுகிறார். முன்னதாக சென்னைவந்துள்ள அவர் காலவாக்கத்தில் உள்ள சிவசுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரி மாணவ,மாணவியரிடையே உரையாடினார். சுமார் அரை மணி நேரம் உரையாடிய அவர் மாணவ, மாணவியரின்கேள்விகளுக்கு சளைக்காமல் பதிலளித்தார்.
பின்னர் மாணவர்களிடையே அவர் பேசுகையில், 2020ம் ஆண்டில் இந்திய மிகப் பெரும் வளர்ச்சி அடைந்தநாடாக உருவாகியிருக்கும். உலக வல்லரசு நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக மாறியிருக்கும். ஆனால் இளையசமுதாயத்தினரின் ஒத்துழைப்பும், கடும் உழைப்பும் இதற்கு அவசியம் தேவை.
நமது நாட்டில் தற்போது ஆன்மீகம், அரசியலும் கைகோர்த்து செயல்படுகின்றன. அத்தோடு பொருளாதாரவளர்ச்சியும் சேர்ந்தால் நம்மை மிஞ்ச உலகில் யாருமே இல்லை என்றார் கலாம்.
கல்பாக்கம் நிகழ்ச்சிக்குப் பிறகு போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் மருந்தாளுநர்கள் மாநாட்டைத்தொடங்கி வைக்கிறார். பிறகு சென்னை நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில், சென்னை நிர்வாகவியல்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.
இந் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இரவு மீண்டும் டெல்லி திரும்புகிறார். கலாம் வருகையையொட்டி சென்னைமற்றும் கல்பாக்கத்தில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications