கல்லணை நீர் கோரி தஞ்சை விவசாயிகள் மறியல்
தஞ்சாவூர்:
வாடிக் கொண்டிருக்கும் பயிர்களைக் காக்க கல்லணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக் கோரி தஞ்சை மாவட்டம்வடக்கூர் பகுதி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்கள் வாடி வருகின்றன. போதிய நீர் இல்லாதகாரணத்தால் கடன் வாங்கி பயிர் செய்துள்ள விவசாயிகள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந் நிலையில் ஓரத்தநாடு அருகே உள்ள வடக்கூர் மற்றும் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த 18க்கும் மேற்பட்ட கிராமவிவசாயிகள் இன்று காலை சாலை மறியலைத் தொடங்கினர். காலை 7 மணிக்குத் தொடங்கிய இந்த மறியல்பிற்பகல் வரை நீடித்தது.
வாடும் பயிர்களைக் காக்க உடனடியாக கல்லணையிலிருந்து தண்ணீரைத் திறந்து விட தமிழக அரசு உத்தரவிடவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். வல்லம் டி.எஸ்.பி, ஓரத்தநாடு தாசில்தார் உள்ளிட்டஅதிகாரிகள் விவசாயிகளிடம் சமாதானப் பேச்சு நடத்தினர். இருப்பினும், உறுதியான வாக்குறுதி கொடுத்தால்தான்போராட்டத்தைக் கைவிடுவோம் என்று விவசாயிகள் கூறி விட்டனர்.
இதைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் பேசி தண்ணீர் விட ஏற்பாடு செய்வதாக வல்லம் டி.எஸ்.பி. கோதண்டம்உறுதியளிக்கவே விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.


Click it and Unblock the Notifications
