எல்.கே.ஜி. குழந்தைகளுக்கு இனி புத்தகம் இல்லை!
சென்னை:
எல்.கே.ஜி, யூ.கே.ஜி. குழந்தைகளுக்கு இனிமேல் பாடப் புத்தகம் இருக்காது. மாறாக ஆடல், பாடல்கள் மூலம்பாடம் நடத்த நிபுணர் குழு தமிழக அரசுக்குப் பரிந்துரைக்க உள்ளது.
மெட்ரிகுலேஷன் பள்ளிப் பாடத் திட்டத்தை சீரமைக்க முன்னாள் துணைவேந்தர் ஞானம் தலைமையில் நிபுணர்குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.இந்தக் குழு வகுப்பு வாரியான பாடத் திட்டம் குறித்து ஆராய்ந்துவருகிறது.
முதல் கட்டமாக எல்.கே.ஜி, யு.கே.ஜி போன்ற கிண்டர் கார்டன் வகுப்புகளுக்கான பாடத் திட்டம் குறித்து இக் குழு அரசுக்குப் பரிந்துரை செய்யவுள்ளது.அதன்படி இனிமேல் கிண்டர் கார்டன் மாணவர்களுக்குபாடப் புத்தகங்கள் இருக்காது, எழுதும் வேலையும் இருக்கக் கூடாது. மாறாக, ஆடல், பாடல்கள்,வாய்மொழியாகவே அவர்களுக்கு பாடம் போதிக்கப்பட வேண்டும்.
மேலும், கிண்டர் கார்டன் மாணவ, மாணவியருக்கு எப்படிப் பாடம் நடத்துவது என்பது குறித்து ஆசிரியர்களுக்குப்போதிக்க வழிகாட்டி நூல்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம் 3வயதிலிருந்தே பாடப் புத்தகங்களை குழந்தைகள் சுமக்கும் கொடுமைக்கு முடிவு வரப் போகிறது.


Click it and Unblock the Notifications
