பிரபாகரன் என பெயர் சூட்டினார் வைகோ: பொடா கோர்ட்டில் சாட்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மதுரை, திருமங்கலத்தில் நடந்த பொதுக் கூட்டத்தின்போது 2 குழந்தைகளுக்கு திலீபன், பிரபாகரன் என்று மதிமுகபொதுச் செயலாளர் வைகோ பெயர் சூட்டியதாக திமுகவைச் சேர்ந்த தொண்டர் மாயாண்டி என்பவர் பொடாநீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பொதுக் கூட்டத்தில் பேசியதாக பொடா சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ளவழக்கில் சாட்சியங்களின் விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் போது திருமங்கலம் அருகே உள்ளசத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் சாட்சியம் அளித்தார். இவர் வைகோ பொதுக்கூட்டத்தைப்பார்த்தவர் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மாயாண்டியின் சாட்சியம்: நான் திமுகவைச் சேர்ந்தவன். எப்போதும் திமுக உறுப்பினர் அட்டையை சட்டைப்பையில் வைத்திருப்பேன்( உறுப்பினர் அட்டையை எடுத்து நீதிபதியிடம் காட்டினார்). ஆனால் திருமங்கலத்தில்நான் பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த போது வைகோ பொதுக் கூட்டம் தொடர்பாக போலீஸார் விசாரணைநடத்தியபோது என்னிடம் உறுப்பினர் கார்டு இல்லை என்றார்.

அப்போது குறுக்கிட்ட வைகோ தரப்பு வக்கீல் தினகரன், உங்களுக்கு விடுதலைப் புலிகள் குறித்தோ அல்லதுஅவர்களது அரசியல் போராட்டம், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டம் குறித்தோ தெரியுமா என்றுகேட்டார்.

அதற்கு மாயாண்டி, விடுதலைப் புலிகள் குறித்து எனக்குத் தெரியாது. ஆனால், தமிழகத்தில் இலங்கைத் தமிழ்அகதிகளுக்கு முகாம்கள் இருப்பது தெரியும் என்றார். பின்னர் அவர் தொடர்ந்து கூறுகையில், திருமங்கலம்பொதுக் கூட்டத்தில்இரண்டு குழந்தைகளுக்கு திலீபன், பிரபாகரன் என்று வைகோ பெயர் சூட்டியதாகவும்தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+