ஜனனி ஜாமீன் மனு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை
டெல்லி:
கஞ்சா வழக்கில் கைதாகியுள்ள மதுரை இளம் பெண் ஜனனி மற்றும் அவரது தாயார் ரமீஜா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை நடைபெறவுள்ளது.
கஞ்சா வைத்திருந்ததாகவும், ரூ. 1 கோடி அளவுக்கு பணம் வைத்திருந்ததாகவும் கூறி மதுரையைச் சேர்ந்தஇளம்பெண் ஜனனி, தாயார் ரமீஜா மற்றும் அவர்களது கார் டிரைவர் சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் மீது மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
தங்களை ஜாமீனில் விடக் கோரி 3 பேரும் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடிசெய்து விட்டது. இந் நிலையில், ஜனனி மற்றும் ரமீஜா ஆகியோரது சார்பில் உச்ச நீதிமன்றத்தில், தனித்தனியாக 3மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவர்களது வழக்கறிஞர் கபில் சிபல் இந்த மனுக்களை தாக்கல்செய்துள்ளார்.
தங்களை ஜாமீனில் விடக் கோரியும், இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரியும் மற்றும் வேறுமாநிலத்திற்கு இந்த வழக்கு விசாரணையை மாற்றக் கோரியும் ஜனனியும், ரமீஜாவும் மனுக்களில் கோரியுள்ளனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை தலைமை நீதிபதி வி.என்.காரே, நீதிபதி சின்ஹா ஆகியோர் முன்னிலையில்நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications