சிறுமி பலி: 4 போக்குவரத்துக் கழக அதிகாரிகள் சஸ்பெண்ட்-ஜெ. அதிரடி
சென்னை:
திருவாரூர் சென்ற பழுதடைந்த அரசுப் பேருந்தின் துவாரம் வழியாக கீழே விழுந்து பலியான 3 வயது சிறுமியின்குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா ரூ. 2 லட்சம் இழப்பீட்டுத் தொகையை அறிவித்துள்ளார். பழுதடைந்தபேருந்தை சரியாக பராமரிக்காத காரணத்திற்காக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் 4 பேரை இடைநீக்கம்செய்து உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த 13ம் தேதியன்றுமன்னார்குடியிலிருந்து திருவாரூர் சென்ற அரசுப் பேருந்தில் பயணம் செய்த முருகன் என்பவரின் 3 வயது மகள்சிறுமி கெளசல்யா என்பவர், பேருந்தின் பழுதடைந்திருந்த துவாரம் வழியாக விழுந்து பலியானார் என்ற தகவல்பெரும் வேதனையைக் கொடுத்துள்ளது.
தாயின் கண் முன்னாலேயே அந்த சிறுமியின் வாழ்கை கொடூரமாக முடிவுற்றது எனக்கு ஆற்ற முடியாததுயரத்தையும் வருத்தத்தையும் அளித்துள்ளது. அளவிட முடியாத இந்த இழப்பால் துயறுரும் குடும்பத்திற்கு எனதுஇதயப்பூர்வமான இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த இழப்பு ஈடு செய்ய டியாதது என்றாலும், துயறுரும் அந்தக் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் இழப்பீடு தர ஆணையிட்டுள்ளேன்.
இந்த விபத்துக்கான காரணங்களை அறிய விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தேன். அதில், முன் சக்கரத்தின்மேலிருந்த பலகையில் ஏற்பட்டிருந்த துளையை 15 நாட்களுக்கு முன் செப்பனிட்டுள்ளனர். அப்போது அவர்கள்காட்டிய அலட்சியமே இந்த பரிதாப மரணத்திற்குக் காரணமாக இருந்தது தெரியவந்தது.
15 மில்லிமீட்டர் பிளைவுட் பலகையால் முழுவதுமாக மாற்றியமைக்கப்பட வேண்டிய தளத்தில், 6 மில்லிமீட்டர்பிளைவுட் பலகையால் ஒட்டு வேலை செய்யப்பட்டிருந்தது. இவ்வாறு மோசமாக பழுது பார்க்கப்பட்டகாரணத்தால்தான் தகுதிக்குறைவான பிளைவுட் பலகை முறிந்து விழுந்ததற்கும், அதன் விளைவாக ஏற்பட்டதுன்பகரமான உயிழப்புக்கும் காரணமாகும்.
அலட்சியமான பணி காரணமாக, எனது உத்தரவின் பேரில், கும்பகோணம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக மன்னார்குடி கிளையைச் சேர்ந்த கோட்ட மேலாளர், கிளை மேலாளர் (பொறுப்பு) உள்ளிட்ட 4 பேர்இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதைத் தடுக்கும் வகையில், அரசுப் போக்குவரத்துக் கழகபேருந்துகள் அனைத்தும், உடனடியாக 100 சதவீத ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றுஉத்தரவிட்டுள்ளேன். இந்த பணி நேற்று முடிவடைந்தது.
பழுதான வாகனங்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு விட்டன. பழுது பார்க்கும் பணிகள் உயர் அதிகாகளின்முறையான கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படும். பணிகளின் தரத்துக்கு அதிகாரிகளே பொறுப்பேற்கவேண்டும். ஒவ்வொரு பேருந்தும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை கடுமையான, முழுமையான உள்பாதுகாப்புபரிசோதனைக்கு உட்படுத்தப்படும்
பழைய பழுதடைந்த பேருந்துகளுக்குப் பதிலாக புதிய பேருந்துகளை வாங்கவும் போக்குவரத்துக் கழக நிர்வாகஇயக்குநர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications