ஜனனி வழக்கு: மதுரை நீதிமன்றம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை
டெல்லி
ஜனனி மீதான கஞ்சா வழக்கை விசாரிக்க மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தங்களுக்கு ஜாமீன் கோரியும், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரியும், வேறு மாநிலத்தில் வைத்து இந்தவழக்கை விசாரிக்கக் கோரியும் ஜனனியும் ரமீஜாவும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் இன்று நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா ஆகியோர் முன்னிலையில்விசாரணைக்கு வந்தன. மனுக்களை விசாரித்த நீதிபதிகள், ஜனனி மீதான வழக்கை விசாரிக்க மதுரைநீதிமன்றத்துக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.
இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஜனனியின் சார்பில் பிரபல வழக்கறிஞர்கள் கபில் சிபல், கே.சுப்பிரமணியம் ஆகியோர் ஆஜராகினர்.
நடராஜனின் தோழியான மதுரையைச் சேர்ந்த ஜனனி, தாயார் ரமீஜா மற்றும் கார் டிரைவர் சதீஷ் ஆகியோர் மீதுகஞ்சா கடத்தியதாக கூறி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சமீபத்தில் நீதிமன்றத்தின் வெளியே நிருபர்களிடம் பேசிய ஜனனி, என் மீது பொய் கேஸ் போட்டுள்ளனர். ஒருநாள் இன்ஸ்பெக்டர் என் வீட்டுக்கு மப்டியில் வந்தார். எங்களை சத்திரப்பட்டி போலீஸ் ஸ்டேசன்ல போய் 2 நாள்உட்கார வச்சு காதால கேக்க முடியாத வார்த்தைகளால திட்டினாங்க.
இன்ஸ்பெக்டரே கஞ்சா கொண்டு வந்து வீட்டுல வச்சு என் மேலே கேஸ் போட்டார் என்றார்.
நடராஜனுக்கு நெருக்கமாக இருந்ததால் சசிகலா சொல்லியே இந்த கேஸ் போடப்பட்டுள்ளதாக அரசல் புரசலாகபேசப்பட்டு வரும் நிலையில் ஜனனி மிக விரைவிலேயே அது தொடர்பான விஷயங்களையும் ஒளிவு, மறைவின்றிபோட்டு உடைக்க வாய்ப்பிருப்பதாக அவரது தரப்பில் கூறுகின்றனர்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications