பொடாவில் ஜாமீன் கிடைத்தாலும் உடனே விடுதலையாக முடியாத நெடுமாறன்
சென்னை:
விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாக பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன், பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் உள்ளிட்ட நான்கு பேருக்கு ஜாமீன் வழங்கிஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், அவர்கள் மீது பிற வழக்குகளும் உள்ளதால், அவற்றிலும் ஜாமீன் பெற்றால் தான் அவர் விடுதலையாகமுடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.
நேற்று இவர்களை விடுதலை செய்த நீதிபதி சிர்புர்கர் மற்றும் நீதிபதி தணிகாசலம் ஆகியோர் தீர்ப்பின்போதுகூறியதாவது:
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தொடர்புஇருப்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. மனுதாரர்களின் மீதுள்ள வழக்குகள் யாவும் அவர்களின்பேச்சுக்களை அடிப்படையாகக் கொண்டது.
யாரிடம் இருந்தும் ஆயுதங்களோ, வெடிமருந்துப் பொருட்களோ கைப்பற்றப்படவில்லை. அவர்களின்வீடுகளிலிருந்து கைப்பற்றப்பட்ட புத்தகங்களும் தடை செய்யப்பட்ட புத்தகங்கள் அல்ல. கைது செய்யப்பட்டஅனைவரும் சமுதாயத்தில் நன்மதிப்பைப் பெற்றவர்கள் மற்றும் கல்வியாளர்கள்.
அவர்கள் கடந்த காலமும், ஜாமீன் வழங்க மறுக்கும் அளவிற்கு மோசமானதல்ல. அண்மையில் பொடா சட்டத்தில்கைதானவர்களை ஓராண்டு சிறைவாசத்திற்குப் பின் ஜாமீனில் விடுவிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம்தெரிவித்துள்ளது. எனவே இவர்களை ரூ.50,000 வீதம் இருநபர் ஜாமீனில் பொடா நீதிமன்றம் விடுதலைசெய்யவேண்டும்.
வழக்கு முடியும்வரை கூட்டங்களில் பேசவோ, பேட்டி தரவோ கூடாது. பாஸ்போர்ட் இருந்தால் அதை பொடாநீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். சாட்சிகளைக் கலைக்க முயற்சிக்கக் கூடாது. விடுதலைப் புலிகள்அமைப்புடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
இதே வழக்கில் கைதாகியுள்ள ஷாகுல் ஹமீது மற்றும் பரந்தாமன் ஆகியோர் சிறை சென்று ஓராண்டு முடியாததால்,அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் தங்களது ஜாமீன் மனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டனர்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications