மதிமுகவும் விலக முடிவு?: பா.ம.க. விலகாது
கோவை:
மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக விலகியதையடுத்து, மதிமுகவும் விலகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்களது நிலைப்பாடு திங்கள்கிழமை வைகோவுடன் பேசிய பின் முடிவெடுக்கப்படும் என மத்திய இணையமைச்சரும் மதிமுக பொருளாளருமான கண்ணப்பன் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளரிடம் அவர் கூறுகையில்,
திங்கள்கிழமை வேலூர் சிறைக்குச் சென்று பொதுச் செயலாளர் வைகோவைச் சந்திப்பேன். பின்னர் மூத்த தலைவர்கள் கூடி விவாதித்து எங்கள் கட்சியின் எதிர்காலத் திட்டம் குறித்து முடிவெடுப்போம் என்றார்.
திமுகவைத் தொடர்ந்து மதிமுகவும் கூட்டணியில் இருந்து வெளியேறிவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ராமதாஸ் யோசனை:
இதற்கிடையே, திமுகவுடன் பேச்சு நடத்தி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒற்றுமையைக் காக்க பா.ஜ.க. முயற்சி எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
திமுகவின் மனக் குறைகள் நியாயமானவை. அதைப் போக்க வேண்டிய பா.ஜ.கவின் கடமை. கூட்டணியை விட்டு விலகும் அளவுக்கு நிலைமை போனது வருத்தம் தருகிறது.
பிரதமர் வாஜ்பாயும், தே.ஜ.கூ. ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டசும் கருணாநிதியுடன் பேச்சு நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
இரு தரப்பினருக்கும் பொதுவான ஒரு நிலையை ராமதாஸ் எடுத்துள்ளதால், கூட்டணியை விட்டு பா.ம.க. விலகப் போவதில்லை என்பதை ராமதாஸ் மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications