தடம் புரளுகிறது பா.ஜ.க. கருணாநிதி குற்றச்சாட்டு
சென்னை:
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல் திட்டத்தில் இருந்து பா.ஜ.க. விலகிச் செல்ல ஆரம்பித்துள்ளதாக திமுகதலைவர் கருணாநிதி குற்றம் சாட்டினார்.
கூட்டணியில் இருந்து விலகுவதாக முடிவெடுக்கப்பட்ட பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் இருந்து பா.ஜ.க. விலகிச் செல்லஆரம்பித்துள்ளது. அயோத்தி உள்பட பல்வேறு விவகாரங்களிலும் செயல் திட்டத்தில் கூறப்பட்டதை அக் கட்சிமதிக்காமல் தடம் புரண்டு செல்கிறது.
அரசு ஊழியர் வேலை நிறுத்த விஷயத்தில் பிரதமர் வாஜ்பாய் மாறி மாறி பேசி வருகிறார். இது போல பலவிஷயங்களிலும் மத்திய அரசிடம் நிலையான கொள்கை இல்லை. இதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம்.
மத்திய அமைச்சரவையில் இருந்து திமுக உடனடியாக விலகுகிறது. மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர்டி.ஆர்.பாலு, சுகாதாரத்துறை இணையமைச்சர் ராஜா ஆகியோர் இன்று மாலையே அல்லது நாளை காலைபிரதமரிடம் தங்களது ராஜினாமா கடிதங்களை சமர்பிப்பர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல் திட்டத்தை மதித்து நடக்கும் வரை பிரதமர் வாஜ்பாயின் அரசுக்குவெளியில் இருந்து எங்களது ஆதரவு கிடைக்கும். அதே நேரத்தில் இந்த ஆதரவு பிரச்சனைகளின் அடிப்படையில்(issue based) தான் இருக்கும்.
திமுகவின் கொள்கைகளுக்கு ஒத்துவராத எந்த விஷயத்திலும் இனி மத்திய அரசுக்கு ஆதரவு தர மாட்டோம்.
அமைச்சரவையில் இருந்து விலகுவது என்பது மறுபரிசீலனை செய்யப்படக் கூடிய முடிவல்ல. இது இறுதியானமுடிவு தான். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இந்த நிமிடத்தில் இருந்து திமுக இல்லை. இனி கூட்டணியின் எந்தகூட்டத்திலும் நாங்கள் பங்கேற்க மாட்டோம்.
பா.ஜ.க. அரசுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதை ஆதரிப்பதா, இல்லையா என்பதை அப்போதுதான் முடிவு செய்வோம்.
அதே நேரத்தில் பிரதமர் வாஜ்பாய் மீது எனக்குள்ள தனிப்பட்ட மரியாதை அப்படியே தான் உள்ளது. அவரைஇன்றும் நான் மிகவும் மதிக்கிறேன். அவருக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. கூட்டணியில்நீடிக்குமாறு அவர் என்னிடம் தொலைபேசியில் பேசியதாக வந்துள்ள செய்திகள் தவறானவை.
பொடா சட்டத்தை குப்பைத் தொட்டியில் போட்டு, மூடி, தூக்கி வீச வேண்டும். பொடாவின் கீழ்கைதாகியுள்ளவர்கள் விடுதலையாக வேண்டும் என்பதற்காகவே பொடா திருத்த சட்டத்தை ஆதரித்துவாக்களித்தோம்.
கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து பா.ம.க, மதிமுகவுடன் நாங்கள் ஆலோசிக்கவில்லை. இது முழுக்க முழுக்கஎங்களது முடிவு.
காங்கிரசுடன் கூட்டணி அமைப்போமா என்பதையெல்லாம் இப்போது எதுவும் கூற முடியாது. அது தேர்தல்நேரத்தில் எடுக்க வேண்டிய முடிவு. இப்போதைக்கு நாங்கள் தனியாகவே இயங்குவோம் என்றார் கருணாநிதி.
உடனிருந்த டி.ஆர். பாலு கூறுகையில், இன்று மாலை அல்லது நாளை காலையே நானும் ராஜாவும் ராஜினாமாகடிதங்களைத் தந்துவிடுவோம். திங்கள்கிழமை முதல் திமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில், தேசிய ஜனநாயகக்கூட்டணியை வெளியில் இருந்து ஆதரிக்கும் கட்சி எம்.பிக்களின் வரிசையில் அமர்வார்கள் என்றார்.
இப்போது மக்களவையில் திமுகவுக்கு 11 எம்.பிக்களும் மாநிலங்களவையில் 8 எம்.பிக்களும் உள்ளனர்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications