டெஸ்மா வழக்கு: தள்ளுபடி செய்ய இளங்கோவன் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தூண்டியதாக கூறி தன் மீது தொடரப்பட்டுள்ள டெஸ்மாவழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் நடந்த அரசு ஊழியர் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தூண்டும் வகையில் பேசியதாகக்கூறி இளங்கோவன் மீது டெஸ்மா சட்டத்தின் 5-வது பிரிவின் கீழ் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது.சென்னை எழும்பூர் தலைமை பெருநகர நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந் நிலையில் தன் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இளங்கோவன் மனுசெய்துள்ளார். அதில், சட்டத்திற்கு உட்பட்டே எனது கருத்துக்களை வெளியிட்டேன். ஆனால் அரசியல்காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதைத் தள்ளுபடி செய்ய வேண்டும்என்று கோரியிருந்தார் இளங்கோவன்.

அவரது மனுவை பரிசீலித்த நீதிபதி தணிகாச்சலம் இது சம்பந்தமாக பதிலளிக்குமாறு கூறி அரசுக்கு நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டார்.

கோர்ட்டில் ஆஜராக கருணாநிதிக்கு சம்மன்

முரசொலியில் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக எழுதியதாக தமிழக அரசு தொடர்ந்துள்ள அவதூறுவழக்கில், வருகிற ஜனவரி 21ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி, ‘முரசொலி’ஆசிரியர் செல்வம் ஆகியோருக்கு சென்னை 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி வெளியான ‘முரசொலி’ நாளிதழில் கருணாநிதி எழுதியிருந்த கட்டுரை தமிழகஅரசுக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் அவப் பெயரை தேடித் தரும் விதத்தில் அமைந்திருந்ததாகக் கூறி தமிழகஅரசின் வழக்கறிஞர் டி.வி.கணேஷ் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக ஜனவரி 21ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கூறி கருணாநிதி,‘முரசொலி’ ஆசிரியரும், பதிப்பாளருமான செல்வம் ஆகியோருக்கு நீதிபதி ராமலிங்கம் சம்மன் அனுப்பஉத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+