என்ன செய்யப் போகிறார் வைகோ?
சென்னை:
திமுகவின் முடிவு மதிமுகவுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளை மதிமுக என்ன முடிவு எடுக்கப்போகிறது என்று அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்தும், மத்திய அமைச்சரவையிலிருந்தும் திமுக விலகியுள்ளது. இதைத்தொடர்ந்து, சமீப காலமாக திமுகவுடன் மிக நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொண்டுள்ள மதிமுக என்ன முடிவைஎடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திமுக தலைவர் கருணாநிதிதான் இனி என் தலைவர், அவரை என் வாழ்நாளில் இனி எதிர்க்கவே மாட்டேன் என்றுசில மாதங்களுக்கு முன்பு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியிருந்தார். மேலும் வைகோ விடுதலைதொடர்பாக திமுக அடிக்கடி மத்திய அரசையும், பிரதமரையும் வலியுறுத்தி வந்துள்ளது. பொடா சட்டத்தையும் ரத்துசெய்யும்படி அது தீவிரமாக வலியுறுத்தி வருகிறது.
வைகோவுக்காக தீவிரமாக குரல் கொடுத்து வரும் திமுக தற்போது எடுத்துள்ள முடிவை மதிமுகவும் கண்டிப்பாகபின்பற்றியாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், திமுகவைப் பின்பற்றி தாங்களும் விலகினால்,வைகோவின் விடுதலையில் சிக்கல் நீடிக்கலாம், அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகலாம் என்று மதிமுகவின்முன்னணித் தலைவர்கள் சிலர் அஞ்சுவதாக கூறப்படுகிறது.
இருப்பினும், நாளை ஒருவேளை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக சேர்ந்தால், கூட்டணியை விட்டுகண்டிப்பாக வெளியேற வேண்டிய சூழ்நிலை மதிமுகவுக்கு ஏற்படும். அதற்கு இப்போதே திமுகவுடன் சென்றுவிடுவது மேல் என்று சில மதிமுக தலைவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் திமுகவுடன் சேர்ந்து வருவதிலும் அவர்களுக்கு ஒரு சிக்கல் உள்ளது. ஒருவேளை காங்கிரஸ் கட்சியுடன்திமுக கூட்டணி ஏற்படுத்தினால், விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளரான மதிமுகவை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ளுமா என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
இந்தக் கேள்விகளால் மதிமுக வட்டாரத்தில் பெரும் குழப்பம், தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது. வைகோ என்ன முடிவுஎடுக்கப் போகிறார் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இருப்பினும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில்மதிமுக நீடிக்கப் போவது இன்னும் சில மணி நேரங்களுக்கு மட்டுமே என்று திமுக வட்டாரத்தில் உறுதியாகக்கூறப்படுகிறது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications