கூட்டணி குறித்து கவலைப்படாதீர்கள்: அதிமுகவினருக்கு ஜெ. அறிவுரை
சென்னை:
திமுக, காங்கிரஸ் கூட்டணி வரப் போகிறது, அதிமுக தனித்து நின்றால் ஜெயிக்காது என்று வெளியாகும்செய்திகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள் என்று அதிமுகவினருக்கு முதல்வரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.
சென்னை அருகே கொளப்பாக்கம் என்ற இடத்தில் கட்சி நிர்வாகிகளிடம் நேர் காணல் மற்றும் நிர்வாகிகள் தேர்வைநடத்தி வருகிறார் ஜெயலலிதா. நேற்றும் சென்னை, திருச்சி, கோவை, சேலம், நெல்லை, நாமக்கல் ஆகியமாவட்டங்களின் நிர்வாகிகளை ஜெயலலிதா சந்தித்தார். இந்த மாவட்டங்களைச் சேர்ந்த வட்டச் செயலாளர்கள்உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகளையும் முதல்வரே தேர்ந்தெடுத்தார்.
பின்னர் நிர்வாகிகள் மத்தியில் ஜெயலலிதா பேசுகையில் சமீப காலமாக அதிமுகவினரை குழப்புவதற்காகவே சிலசெய்திகள் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகின்றன.
திமுகவும், காங்கிரஸும் கூட்டணி வைக்கப் போகின்றன, அதிமுக தனித்து நின்றால் ஒரு இடத்தில் கூட ஜெயிக்காதுஎன்பவைதான் அந்த செய்திகள். இதில் துளியும் உண்மை இல்லை. இந்த செய்திகளைக் பற்றிக் கவலையேபடாதீர்கள்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து நம்முடன் யார் கூட்டணி வைக்கிறார்களோ அவர்கள்தான் அதிகஅளவில் பலன் அடைந்திருக்கிறார்கள். எனவே யார் நம்முடன் கூட்டணி வைப்பார்கள் என்பது குறித்து நாம்கவலைப்படத் தேவையில்லை. யாருக்குத் தேவையோ அவர்களே நம்மைத் தேடி வருவார்கள்.
தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியையும் சேர்த்து உள்ள மொத்தம் 40 எம்.பி தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும்.இதுதான் இப்போதைக்கு உங்களது நோக்கமாக இருக்க வேண்டும்.
மத்தியில் யார் ஆட்சி அமைத்தாலும் நமக்குக் கவலையில்லை. ஆனால் தமிழக நலன் குறித்துகவலைப்படுபவர்களாக அவர்கள் இருந்தே ஆக வேண்டும்.
கட்சியினர் மத்தியில் ஒற்றுமை நிலவ வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருக்கக் கூடாது. கடும் உழைப்பைமட்டுமே உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் என்றார் அவர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications