திண்டுக்கல் நீதிமன்றத்திலும் நெடுமாறனுக்கு ஜாமீன்: இன்னொரு மனு மீது நாளை தீர்ப்பு
சென்னை:
சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் ஜாமீன் கோரியுள்ள தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ. நெடுமாறன் மனு மீதான தீர்ப்பு நாளை கூறப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.
விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாகக் கூறி பொடா சட்டத்தின் கீழ் நெடுமாறன் உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டனர். இதில் சென்னை உயர் நீதிமன்றம் நெடுமாறன் உள்ளிட்ட நான்கு தமிழர் தேசிய இயக்கநிர்வாகிகளை ஜாமீனில் விடுவித்தது.
இதைத் தொடர்ந்து டாக்டர் தாயப்பன் மற்றும் சுப வீரபாண்டியன் ஆகியோர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.ஆனால் நெடுமாறன் மீது சென்னை ஆலந்தூர் மற்றும் திண்டுக்கல் சார்பு நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில்உள்ளதால் அவர் விடுவிக்கப்படவில்லை.
இந் நிலையில் நேற்று திண்டுக்கல் வழக்கில் நெடுமாறனுக்கு ஜாமீன் கிடைத்தது. ஆலந்தூர் வழக்கிலிருந்தும்ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி நெடுமாறனின் வழக்கறிஞர் சுந்தரபாண்டியன் மனு செய்திருந்தார்.
இந்த மனு மீது இன்று நீதிபதி ஆனந்தன் விசாரணை நடத்தினார். அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர்,நெடுமாறனை ஜாமீனில் விடுதலை செய்யக் கூடாது என்று வலியுறுத்தினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டநீதிபதி, இந்த மனு மீதான தீர்ப்பை நாளை கூறுவதாக அறிவித்தார். இதனால் நெடுமாறன் விடுதலை இன்னும் ஒருநாளைக்கு தள்ளிப் போயுள்ளது.
-
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications