சாலை பணியாளர்களுக்கு நிவாரணம்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
பணி நீக்கம் செய்யப்பட்ட 10,000 சாலைப் பணியாளர்களுக்கும் வரும் பொங்கலுக்குள் ஒரு மாத சம்பளத்தைஇடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பணியமர்த்தப்பட்ட 10,000 நெடுஞ்சாலைப்பணியாளர்களை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி ஒட்டுமொத்தமாக டிஸ்மிஸ் செய்தது.
இதை எதிர்த்து தமிழக அரசின் நிர்வாக நடுவர் மன்றத்தில் சாலைப் பணியாளர்கள் வழக்குத் தொடர்ந்தனர்.அத்தோடு மாநில அளவில் பல்வேறு போராட்டங்களையும் தொடர்ச்சியாக நடத்தி வந்தனர்.
நடுவர் மன்றம், அரசின் உத்தரவு செல்லும் என்று கூறி சாலைப் பணியாளர்களின் வழக்கை தள்ளுபடி செய்தது.இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்கம்சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிர்புர்கர், கண்ணதாசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இன்னும் 3வாரத்திற்குள் (அதாவது பொங்கல் பண்டிகைக்குள்) டிஸ்மிஸ் செய்யப்பட்ட 9,728 சாலைப் பணியாளர்களுக்கும்ஒரு மாத சம்பளத்தை இடைக்கால நிவாரணமாக தமிழக அரசு வழங்க வேண்டும்.
மேலும், தமிழக அரசு அலுவலகங்களில் எங்கெல்லாம் பணியிடங்கள் உள்ளதோ அங்கெல்லாம் சாலைப்பணியாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணியில் அமர்த்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
-
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications