தி.க. பொது செயலாளர் சாலை விபத்தில் மரணம்
சென்னை:
திராவிடர் கழக பொதுச் செயலாளர் துரை. சக்கரவர்த்தி சென்னை அருகே நடந்த சாலை விபத்தில் பலியானார்.
திராவிடர் கழக பொதுச் செயலாளராக சில மாதங்களுக்கு முன்பு துரை. சக்கரவர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தபதவியிலிருந்த வீரமணி இளைய தலைமுறைக்கு வழி விட்டு விலகினார். அவரது நம்பிக்கைக்கு உரியசக்கரவர்த்தியை பொதுச் செயலாளராக்கினார்.
இன்று பெரியார் நினைவு நாளையொட்டி அதில் கலந்து கொள்வதற்காக தனது சொந்த ஊரான தஞ்சாவூர்மாவட்டம் அய்யம்பேட்டையிலிருந்து ஜீப் மூலம் துரை. சக்கரவர்த்தி, தி.க. துணைப் பொதுச் செயலாளர்குலசேகரன் உள்ளிட்ட 4 பேர் சென்னை வந்தனர்.
இன்று அதிகாலை சென்னை அருகே உள்ள மீனம்பாக்கம் விமான நிலைய பகுதியில் அவர்களது ஜீப் வந்தபோது,எதிரே சென்று கொண்டிருந்த டிரைலர் லாரி திடீரென்று பிரேக் போட்டு நின்றது. இதனால் துரை. சக்கரவர்த்தியின்ஜீப் தடுமாறி லாரியின் பின் சக்கரத்தில் மோதியது.
இதில் துரை. சக்கரவர்த்தி சம்பவ இடத்திலேயே இறந்தார். குலசேகரன் உள்ளிட்ட 3 பேர் படுகாயமடைந்தனர்.அனைவரும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
54 வயதாகும் துரை. சக்கரவர்த்திக்கு மனைவி, மகன், 3 மகள்கள் உள்ளனர். அவரது உடல் சென்னை பெரியார்திடலில் பொதுமக்கள் பார்வைக்கு இன்று பிற்பகல் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு திராவிட கழகத் தலைவர்கி.வீரமணி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவரது உடல் அய்யம்பேட்டைக்குக் கொண்டு செல்லப்பட்டது. நாளை இறுதிச் சடங்குகள்நடக்கவுள்ளதாக திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications