கடலூரில் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்!
கடலூர்:
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட ஜாதி மோதலை அடக்க முயன்ற துணைகாவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளர் ஆகியோர் மீது வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தியது.
வடலூர் அருகே பச்சாரம்பாளையம் என்ற கிராமம் உள்ளது. இங்கு திங்கள்கிழமை இரவு இரு பிரிவினருக்குஇடையே மோதல் ஏற்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடியை ஏற்றுவது தொடர்பாக இந்த மோதல்ஏற்பட்டது. இதில் ஒரு பிரிவினர் வசிக்கும் குடிசை வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன.
ஆத்திரமடைந்த அந்த சமுதாயத்தினர் 200 பேர் ஒன்றாக திரண்டனர். தகவல் அறிந்ததும் நெய்வேலி துணை காவல்கண்காணிப்பாளர் பெருமாள், வடலூர் காவல் நிலைய ஆய்வாளர் கோபால் ஆகியோர் போலீஸ் படையுடன்அங்கு விரைந்தனர்.
கும்பலைக் கலைந்து போகுமாறு சமாதானப்படுத்தினர். அப்போது தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்தனர்.ஆனால் குடிசைகளில் தீயை அணைக்க அவர்கள் சம்மதிக்கவில்லை. மேலும், போலீஸார் கூறுவதையும் ஏற்கமறுத்தனர்.
இந் நிலையில் திடீரென்று சிலர் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்த முயன்றனர். இதில் டி.எஸ்.பி. பெருமாளும்,இன்ஸ்பெக்டர் கோபாலும் காயமடைந்தனர். உடனடியாக இருவரும் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கூடுதல் டிஜிபி வெங்கடகிருஷ்ணன், வடக்கு மண்டல ஐ.ஜி. மகேந்திரன், விழுப்புரம் டிஐஜி கந்தசாமி, கடலூர்மாவட்ட கண்காணிப்பாளர் ராஜீவ் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கிராமத்தில் முகாமிட்டுள்ளனர்.வன்முறை பரவாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications