ராணி மேரி கல்லூரி விவகாரம்: வழக்கு "பைசல்" ஆனது!
சென்னை:
சென்னை மெரீனா கடற்கரையோரம் உள்ள பழமையான ராணி மேரிக் கல்லூரியை இடிக்க மாட்டோம் என்று தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் உறுதிமொழி அளித்ததால், கல்லூரியை இடிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு பைசல் செய்யப்பட்டதாக (கைவிடப்பட்டதாக) சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது.
சென்னை மெரீனா கடற்கரையோரம் காமராஜர் சாலையில் உள்ள பழம் பெரும் ராணி மேரிக் கல்லூரியை இடித்து விட்டு அந்த இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப் போவதாக செய்திகள் பரவியதும் மாணவிகள் பெரும் போராட்டத்தில் இறங்கினர்.
மாணவிகளுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்தன. இதற்காக திமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட சிலர் கைதும் செய்யப்பட்டனர்.
இந் நிலையில் கல்லூரியை இடிப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந் நிலையில் அரசு தலைமை வழக்கறிஞர் என்.ஆர்.சந்திரன் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில் ராணி மேரிக் கல்லூரியை இடிக்கும் எண்ணம் அரசிடம் இல்லை. அது இடிக்கப்பட மாட்டாது என்று உறுதியளித்திருந்தார்.
இதையடுத்து ராணி மேரிக் கல்லூரி இடிப்பு எதிர்ப்பு ரிட் மனுக்கள் அனைத்தையும் பைசல் ஆனதாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி கோவிந்தராஜன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அறிவித்தது.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications