புலிகளால் தமிழக மீனவர்களுக்கு கொடுமை: கடலோர காவல்படை தகவல்
சென்னை:
இலங்கை கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள் புகுந்தபோது அவர்களை விடுதலைப் புலிகளின், கடல் புலிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் பிடித்துச் சென்று கொடுமைப்படுத்தியதாக இந்திய கடலோரக் காவல் படையின் கிழக்குப் பிராந்திய கமாண்டர் கமோடர் உதய் நாராயண் சிட்னவிஸ் கூறியுள்ளார்.
கிழக்குப் பிராந்திய புதிய கமாண்டராக பொறுப்பேற்றுள்ள சிட்னவிஸ் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்திய கடல் எல்லைக்குள் புகுந்து தமிழக மீனவர்களை கடல் புலிகள் கடத்திச் செல்லவில்லை. இருப்பினும், தமிழக மீனவர்கள், இலங்கை கடல் எல்லைக்குள் புகுந்தபோது அவர்களை கடல் புலிகள் சிறை பிடித்துச் சென்றுள்ளனர்.
தமிழக மீனவர்களிடம் சற்று கடுமையாகவும் அவர்கள் நடந்து கொண்டுள்ளனர். இருப்பினும் கடல் புலிகள் இந்திய கடல் எல்லைக்குள் ஊடுறுவுவதில்லை. இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும்போதுதான் நமது மீனவர்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது.
கச்சத் தீவு மற்றும் முல்லைத் தீவு பகுதிகளுக்கு நமது மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும்போது அவர்களை கடல் புலிகள் மடக்குகிறார்கள். இந்தியர்கள் அல்லது இந்திய உளவுத் துறையினர் என்ற சந்தேகத்தில் நமது மீனவர்களை புலிகள் பிடித்துச் செல்கிறார்கள்.
கடல் புலிகளை கட்டுப்படுத்த வேண்டியது இலங்கை அரசுதான். அவர்களது உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிட இந்தியா விரும்பவில்லை.
10 நாட்களுக்கு ஒரு முறை எத்தனை தமிழக மீனவர்கள் பிடிபட்டுள்ளனர் என்ற தகவலை இலங்கை அரசு நமக்கு அனுப்பி வைக்கிறது. பிடிபடுபவர்கள் முடிந்த அளவுக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படுவதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது என்றார் அவர்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications