ரூ. 4.7 கோடி ஹெராயின் பறிமுதல்: அதிமுக புள்ளி உள்பட பலர் கைது
சென்னை:
ஹெராயின் கடத்திய முக்கிய அதிமுக பிரமுகர் ரவிசங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கூட்டாளிகளும் கைதுசெய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ. 4.7 கோடி மதிப்புள்ள 4.7 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் விளாத்திக்குளம் சட்டசபைத் தொகுதி திமுக சார்பில் எம்.எல்.ஏ. ஆன ரவிசங்கர் தற்போதுஅதிமுகவில் உள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த ஒரு நபருக்கு இவர் கொடுத்த ஹெராயினுக்கு பணம் வந்து சேரவில்லை என்று தெரிகிறது.இதையடுத்து பரமகுடியில் ஒரு விடுதியில் தங்கியிருந்த அந்த நபரை ரவிசங்கர் தனது ஆட்களுடன் சேர்ந்து தாக்கி,கட்டி, காரில் போட்டு சென்னைக்குக் கொண்டு வந்தார்.
பின்னர் அவரை சென்னை மண்ணடி பகுதியில் ஒரு அறையில் அடைத்து வைத்தனர். அவர் வசம் இருந்த ரூ. 1.5கோடி மதிப்புள்ள 1.5 கிலோ ஹெராயினையும் ரவிசங்கரின் ஆட்கள் பறித்துக் கொண்டனர்.
அறையில் கட்டிப் போடப்பட்டிருந்த அந்த இலங்கை வாலிபர் ஜன்னல் வழியாக அப் பகுதியில் நடந்து சென்றஒருவருக்கு சைகை மூலம் தான் கட்டி வைக்கப்பட்டுள்ளதைத் தெரிவித்தார்.
இதைப் பார்த்த அந்த நபர் போலீசாருக்குத் தகவல் தந்தார். இதைத் தொடர்ந்து போலீசார் நேற்றிரவு அங்கு சென்றுஅந்த நபரை விடுவித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது தான் அது ஒரு போதை பொருள் கடத்தல்கும்பல் என்று தெரியவந்தது.
இதையடுத்து போதைத் தடுப்பு போலீசாருக்குத் தகவல் தரப்பட்டது. இதையடுத்து போதைப் பொருள் தடுப்புபோலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.
அவர் கொடுத்த தகவலின் பேரில் மதுரவயலில் ஒரு லாட்ஜில் போலீஸார் சோதனை நடத்தினர்.
அங்கிருந்த வெங்கடேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. ரவிசங்கர், ரகு, சங்கர், அர்ஜூன் ஆகியோரையும் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து மேலும் 1.5 கிலோ ஹெராயின் பறிதல் ஆனது.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பட்டுக்கோட்டை அருகே குருவிக்கரம்பையில் உள்ள ரகுவின் உறவினர்செந்தில் என்பவரின் வீட்டிலும் போலீசார் சோதனையிட்டனர்.
அங்கிருந்த 1.7 கிலோ ஹெராயினும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 5 பேரும் கைதாகினர்.
கைதான ரவிசங்கர் உள்ளிட்ட அனைவரும் இன்று போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மாஜிஎம்.எல்.ஏ. ரவிசங்கர் உள்ளிட்டோர் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications