அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ் வழக்கு: இறுதி அறிக்கை இன்று தாக்கல்
சென்னை:
அரசு ஊழியர் டிஸ்மிஸ் தொடர்பான வழக்கை விசாரித்து வந்த 3 நீதிபதிகள் குழுவைச் சேர்ந்த நீதிபதி தங்கவேலுதனது இறுதி அறிக்கையை இன்று அரசிடம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேலைநிறுத்தம் செய்து டிஸ்மிஸ் ஆன அரசு ஊழியர்கள் 6072 பேரின் வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி மலை சுப்ரமணியம், நீதிபதி தங்கவேலு, நீதிபதி சம்பத் ஆகியோரைக் கொண்ட குழுவைநியமித்தது.
இந்தக் குழுவினர் விசாரணையை முடித்து முதல் கட்ட அறிக்கையை ஏற்கனவே தாக்கல் செய்தனர். அந்தஅறிக்கையில் தலைமைச் செயலகம் மற்றும் சென்னையைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குறித்த தீர்ப்புவழங்கப்பட்டிருந்தது.
அதன்படி 583 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர், 132 பேர் ழுமையாக மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டனர்,மற்றவர்களுக்கு ஊதிய உயர்வு ரத்து, பதவி இறக்கம் போன்றவை வழங்கப்பட்டன.
இந் நிலையில் பிற மாவட்ட அரசு ஊழியர்கள் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி சம்பத், நீதிபதிமலைசுப்ரமணியம் ஆகியோர் தங்களது விசாரணை அறிக்கையை கடந்த 26ம் தேதி அரசிடம் கொடுத்தார்கள்.
3-வது நீதிபதியான தங்கவேலு மட்டும் தனது அறிக்கையை கொடுக்காமல் இருந்தார். அவரும் இன்று தனது இறுதிஅறிக்கையை கொடுத்து விடுவார் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து பிற மாவட்ட அரசு ஊழியர்கள் மீதானதீர்ப்பை தமிழக அரசு அமல்படுத்தும் என்று தெரிகிறது.
இவர்களிலும் கணிசமான அளவு ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டு இருப்பார்கள் என்று ஊகிக்கப்படுகிறது.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications