பாஸ்போர்ட் கட்டண உயர்வு வதந்தியால் அலைமோதிய கூட்டம்

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்கான கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப்படப் போவதாக கிளம்பிய வதந்தியால்,திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு ஆயிரக்கணக்கான பேர் திரண்டு வந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்புஏற்பட்டது.

திருச்சியில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் உள்ளது. இங்கு தினசரி 800 பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் வரைவரும். ஆனால் கடந்த ஒரு வாரமாக தினசரி 2000 விண்ணப்பங்கள் வரை வந்து கொண்டுள்ளன. பாஸ்போர்ட்விண்ணப்பத்திற்கான கட்டணம் பல மடங்கு உயரப் போவதாக கிளம்பியுள்ள வதந்தியே இதற்குக் காரணம்.

அதிலும் நேற்று மட்டும் ஆயிரக்கணக்கான பேர் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வந்ததால் அங்கு பெரும் பரபரப்புஏற்பட்டது. ஜனவரி மாதத்திற்குள் கொடுக்கப்படும் விண்ணப்பங்களுக்கு சலுகை கொடுக்கப்படவுள்ளதாகவும்,அதற்குப் பிறகு பல மடங்கு கட்டண உயர்வு அமலாக உள்ளதாகவும், கிளம்பிய வதந்தி காரணமாக இத்தனைகூட்டம் வந்தது.

போலீஸார் விரைந்து வந்து பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனர். பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் இந்தவதந்தி குறித்து முறையான விளக்கம் அளிக்காமல் தாமதிப்பதே இந்த கூட்டத்திற்கும், தேவையில்லாதபதற்றத்திற்கும் காரணம் என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.

பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்கள் சிலரும் இந்த வதந்திக்குக் காரணம் என திருச்சி மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். வதந்தி மூலம் பாஸ்போர்ட் வேண்டி வருபவர்களிடம் நல்ல வசூலை நடத்தவேஏஜெண்டுகளுடன், சில பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்கள் கைகோர்த்துக் கொண்டு இந்த வதந்தியைப் பரவவிட்டிருப்பதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

எப்படியோ, திருச்சி பாஸ்போர்ட் அலுவலக வளாகத்தில் தினசரி ஆயிரக்கணக்கானனோர் கூடி வருவதால் அப்பகுதி மக்களும், போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது மட்டும் உண்மை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+