புத்தாண்டுயொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு
சென்னை:
புத்தாண்டுக் கொண்ட்டாட்டத்தின்போது சென்னை நகரில் பலத்த பாதுகாப்புக்கு மாநகர காவல்துறை ஏற்பாடுசெய்துள்ளது.
2004ம் ஆண்டு பிறக்கவுள்ளதையடுத்து புத்தாண்டை வரவேற்கும் வகையில் சென்னை நகரின் முக்கிய சாலைகள்,மெரீனா கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் 31ம் தேதி இரவு கொண்ட்டாட்டத்தில் ஈடுபடுவது மக்களின் வழக்கம்.
இந்த கொண்டாட்டங்களின்போது பிரச்சினை எழாமல் தடுக்கும் பொருட்டு போலீஸார் கடுமையானவிதிமுறைகளை அறிவித்துள்ளனர்.
மெரீனா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, முக்கிய ஹோட்டல்கள்,பதற்றமான பகுதிகள், கோவில்கள், பேராலயங்கள் ஆகியவற்றில் போலீஸார் அதிக அளவில்குவிக்கப்படவுள்ளனர்.
மொத்தம் 7000 போலீஸார் வரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். இதுதவிர 1000 தமிழ்நாடு சிறப்புப்போலீஸ் படையினரும் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
யாருக்கும் எந்தவித தொந்தரவும் தராமல் புத்தாண்டை கொண்டாட வேண்டும். பொது இடங்களில் அநாகரிகநடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று காவல்துறை ஆணையர் நடராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குடித்து விட்டு வண்டிகளை வேகமாக ஓட்டுவது, கோக், பெப்சி போன்ற பானங்களை பிறர் மீது ஊற்றிவிளையாடுவது, இரு சக்கர வாகனங்களில் 2 பேருக்கு மேல் அமர்ந்து செல்வது ஆகியவை கண்டிப்பாகஅனுமதிக்கப்படாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications