கருணாநிதியுடன் சோனியா தொலைபேசியில் பேச்சு: கூட்டணி குறித்து ஆலோசனை
டெல்லி:
திமுக தலைவர் கருணாநிதியுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று தொலைபேசியில் பேசினார்.
அப்போது தமிழகத்தில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தலைமை தாங்குமாறு கருணாநிதியை சோனியா காந்திகேட்டுக் கொண்டார். மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறிதற்காக தனதுவாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
அரசியலுக்கு சோனியா வந்தது முதல் கருணாநிதியுடன் அவர் பேசுவது இதுவே முதல் முறையாகும். ராஜிவ் காந்திபடுகொலைக்குப் பின் திமுகவுடன் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒருவர் கூட்டணி குறித்து பேசியுள்ளதும் இதுவேமுதல் முறையாகும்.
அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்திய பின் புத்தாண்டு வாழ்த்துக்களையும் கருணாநிதிக்கு சோனியாதெரிவித்தார்.
கடைசியாக திமுகவும் காங்கிரசும் இணைந்து போட்டியிட்டது 1980ம் ஆண்டில் தான். அப்போது இரு கட்சிகளும்கூட்டாக நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்து பெரும் வெற்றி பெற்றன.
1997ம் ஆண்டில் குஜ்ரால் தலைமையில் மத்தியில் தேசிய முன்னணி ஆட்சியில் இருந்தபோது, ராஜிவ் கொலையில்திமுகவுக்கு தொடர்புள்ளதால், அக் கட்சியின் அமைச்சர்களை நீக்க வேண்டும் என சோனியா கோரிக்கைவைத்தார்.
அதை குஜ்ரால் ஏற்க மறுத்ததால் காங்கிரஸ் தனது ஆதரவை வாபஸ் பெற்று அவரது ஆட்சியைக் கவிழ்த்தது.அன்றிலிருந்து திமுக- காங்கிரஸ் இடையிலான உறவு மோசமான நிலைக்குச் சென்றது.
அதே நேரத்தில் மூப்பனார் போன்ற மூத்த காங்கிரஸ் தலைவர்கள் திமுகவுடன் நல்லுறவு கொண்டிருந்தனர்.
இந் நிலையில் கருணாநிதியுடன் சோனியா தொலைபேசியில் பேசியிருப்பது மிக, மிக முக்கியத்துவம் பெறுகிறது.
மதிமுகவையும் சேர்க்க வாசன் விருப்பம்
இதற்கிடையே, இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன்,
திமுகவும், மதிமுகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளது வரவேற்புக்குரியது. இதன்மூலம் தமிழகத்தில் ஒரு புதிய கூட்டணி உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது மக்கள் விரும்பும் கூட்டணியாகஅமையும். இதில் மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றிணையும். அகில இந்திய காங்கிரஸ் தலைமையும் இதைஉணர்ந்து புதிய கூட்டணியை உருவாக்க நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்.
பா.ம.கவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறினால் அவர்களையும் கூட்டணியில் சேர்ப்பதுகுறித்து நிச்சயம் பரிசீலிப்போம் என்றார்.
வாசனின் இந்தக் கருத்து மதிமுகவையும் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்ற அவரதுவிருப்பத்தையே காட்டுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications