பதவி சுகத்தை அனுபவித்து ஓடிய திமுக, மதிமுக: பா.ஜ.க. கடும் குற்றச்சாட்டு
கோவை:
திமுகவும் மதிமுகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து இத்தனை ஆண்டுகள் பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு இப்போது தேர்தல் வரும் நேரத்தில் ஓடிப்போய் விட்டன என பா.ஜ.க. பொதுச் செயலாளர் இல.கணேசன் குற்றம் சாட்டினார்.
கோவையில் ஆர்.எஸ்.எஸ். முகாமில் கலந்து கொண்ட பின் நிருபர்களிடம் பேசிய அவர்,
அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பா.ஜ.கவுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. பிரதமராக வாஜ்பாயை ஏற்க அதிமுக முன் வந்தால் கூட்டணி அமைக்கத் தயார். திமுகவும் மதிமுகவும் இத்தனை ஆண்டுகளாக மத்தியில் பதவி சுகத்தை அனுபவித்தன.
ஒன்றரை ஆண்டுக்கு முன்பே காங்கிரசுடன் பேசி வைத்துவிட்டு இப்போது கூட்டணியை விட்டு ஓடியிருக்கின்றன.
திமுக இவ்வளவு செய்தும் நாங்கள் அதிமுகவுடன் பேச்சு நடத்தவே இல்லை. அக் கட்சியுடன் கூட்டணி அமையாவிட்டாலும் தனித்துப் போட்யிட பா.ஜ.க. தயார். கூட்டணி அமைக்கத் தயார் என்றரீதியில் தான் முதல்வர் ஜெயலலிதாவும் அதிமுகவினருடனான நேர்காணல் நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.
வைகோவின் விடுதலைக்கு பா.ஜ.க. எந்த விதத்திலும் தடையாக இருக்காது என்றார் கணேசன்.
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications