பெண்ணை காதலித்து ஏமாற்றியதாக அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி மீது புகார்
சென்னை:
தமிழக அமைச்சர் ஒருவரின் பாதுகாப்பு அதிகாரி, பெண்ணைக் காதலித்து கல்யாணம் செய்து கொள்ளாமல்ஏமாற்றி விட்டதாகக் கூறி அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரைக் காதலித்த பெண்தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தபோது, போலீஸார் காப்பாற்றினர்.
மூத்த அமைச்சர் ஒருவருக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருப்பவர் சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன். சென்னைசைதாப்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பில் மனைவி மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
சேலத்தைச் சேர்ந்த ஒரு பெண் வேலை தேடி அடிக்கடி தலைமைச் செயலகத்திற்கு வருவது வழக்கம். அப்போதுஅவருக்கும், பாலமுருகனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மாறியது, உள்ளங்களோடு உடல்களும்இணைந்தன. கல்யாணம் செய்து கொள்வதாகவும் அப் பெண்ணுக்கு பாலமுருகன் வாக்கு கொடுத்திருந்தார்.
இந் நிலையில் பாலமுருகனின் வீட்டு முகவரியை கஷ்டப்பட்டு கண்டுபிடித்தார் அப் பெண். பின்னர்சைதாப்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்புக்குச் சென்றார். அங்கு சென்று பார்த்தபோது, பாலமுருகன் ஏற்கனவேகல்யாணம் ஆனவர் என்று தெரிய வந்ததால் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்.
இது குறித்து பாலமுருகனிடம் கேட்டபோது அவர் பதில் ஏதும் கூறவில்லை. இதனால் குழப்பமடைந்த அப் பெண்தன்னை உடனடியாகக் கல்யாணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் பாலமுருகன் முடியாதுஎன்று கூறி விட்டார்.
இதையடுத்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் இந்தப் பிரச்சினையை அப் பெண் கொண்டு சென்றார்.அவர்களது அறிவுரைப்படி மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அப் பெண் புகார் கொடுத்தார்.இதையடுத்து பாலமுருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவர் கைது செய்யப்படலாம்என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, சைதாப்பேட்டை பஸ்நிலையத்தில் வைத்து பாலமுருகனின் காதலி தற்கொலைக்கு முயன்றார்.அவரை போலீஸார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் மீது தற்கொலைக்கு முயற்சி செய்ததாகப்போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications