3ம் தேதி கருணாநிதி- ஹர்கிஷன் சுர்ஜித் சந்திப்பு
டெல்லி:
தேசிய அளவில் பா.ஜ.கவுக்கு எதிரான கூட்டணி அமைக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஹர்கிசன் சிங் சுர்ஜித், நேற்று முன் தினம் திமுக தலைவர்கருணாநிதியுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
இந் நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் பேசிய அவர், இன்று உத்தரப் பிரதேச முதல்வரும் சமாஜ்வாடிகட்சியின் தலைவருமான முலாயம் சிங் யாதவைச் சந்தித்து புதிய கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந் நிலையில் அவர் வரும் 3ம் தேதி கருணாநிதியை நேரில் சந்தித்துப் பேச சென்னை வருகிறார். அன்றையதினமே வேலூர் சிறைக்குச் சென்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும் அவர் சந்தித்துப் பேசுகிறார்.
தே.ஜ. கூட்டணியில் இருந்து வெளியேறிய திமுக, மதிமுக, தேசிய மாநாட்டுக் கட்சி, ராம்விலாஸ் பாஸ்வானின்கட்சி ஆகியவற்றையும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியையும், ஜனதா தளத்தின் ஒரு பிரிவையும் காங்கிரஸ்தலைமையிலான கூட்டணியில் கொண்டு வர சுர்ஜித் முயற்சி மேற்கொண்டுள்ளார்.
ஆனால், மாயாவதி இருந்தால் நான் இருக்க மாட்டேன் என முலாயம் கூறுவதால் இது போன்ற சிக்கல்களைப்போக்க ஒரே நேரத்தில் இரு அணிகளை உருவாக்க சுர்ஜித் திட்டமிட்டுளளார். ஒருவரோடு ஒருவர் இணைந்துபோக முடியாத பா.ஜ.க. எதிர்ப்புக் கட்சிகள் இந்த இரு அணிகளில் பிரிந்து இடம் பெறலாம் என அவர்கருதுகிறார்.
இதில் ஒரு அணிக்கு காங்கிரசும் இன்னொரு அணிக்கு இடதுசாரிக் கட்சிகளும் தலைமை வகிக்கும்.
மூன்றாவது அணி என்று ஒன்று அமைந்தால் அது பா.ஜ.கவுக்கு சாதகமாகிவிடும் என்பதால், அக் கட்சிக்கு எதிரானஅனைத்துக் கட்சிகளையும் காங்கிரஸ்- இடதுசாரிகள் தலைமையில் ஒன்றிணைப்பதில் மார்கிச்ஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி தீவிரமாக இறங்கியுள்ளது.
இந் நிலையில் முலாயம் சிங் யாதவை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் பா.ஜ.கவும் இறங்கியுள்ளது. அவரைதேசிய ஜனநாயக முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டசும் இன்று சந்தித்துப் பேசினார்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications