அதிமுக பெண் எம்.எல்.ஏ. மீது பெண் பஞ்சாயத்துத் தலைவர்கள் புகார்
சென்னை:
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏகனிதா சம்பத்தின் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளமேலமயூர் பெண் பஞ்சாயத்துத் தலைவர் மங்களக் குட்டிக்கு போதுமான பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றுமுதல்வர் ஜெயலலிதாவுக்கு, தமிழக பெண் பஞ்சாயத்துத் தலைவர்கள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக செயல் தலைவர் அமுதா செய்தியாளர்களிடம் கூறுகையில், மேலமயூர் பஞ்சாயத்து தலைவர்மங்களக் குட்டியின் கணவர் குட்டி, கடந்த ஆண்டு மே மாதம் அவரது வீட்டுக்கு அருகே ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
போலீஸார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், கனிதா சம்பத் முக்கியக் குற்றவாளியாகசேர்க்கப்பட்டுள்ளார். இருப்பினும் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. மேலும், குற்றப்பத்திரிக்கையில்அவரது பெயர் சேர்க்கப்படவே இல்லை.
தற்போது கனிதா சம்பத் மற்றும் அவரது ஆதரவாளர்கள், மங்களக் குட்டிக்கும், அவரது குழந்தைகளுக்கும் கொலைமிரட்டல் விடுத்த வண்ணம் உள்ளனர். அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. சுதந்திரமாக நடமாடமுடியவில்லை. உடனடியாக பதவி விலகி விடுமாறும் கனிதா சம்பத்தின் ஆதரவாளர்கள் மிரட்டி வருகிறார்கள்என்றார்.
உடன் இருந்த மங்களக் குட்டி கூறுகையில், கனிதா சம்பத் மற்றும் அவரது ஆதரவாளர்களின் மிரட்டல் குறித்துபோலீஸாரிடம் பலமுறை புகார் கூறியும் இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்கள் சரியாகசெயல்பட்டிருந்தால் எனது கணவரின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம்.
கனிதா சம்பத்தின் கணவர் என்னை கொலை செய்து விடுவதாக பொதுமக்கள் மத்தியில் பகிரங்கமாக மிரட்டல்விடுக்கிறார். ஆனால் காவல்துறை அமைதியாக உள்ளது என்றார் கண்களில் நீர்மல்க.
இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் புகார் அனுப்பியிருப்பதாக அமுதா தெரிவித்தார்.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications