ரேஷன் கார்டுகளில் எச் முத்திரை: இன்றுடன் கெடு முடிகிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மாத வருவாய் ரூ. 5,000 உடையோர் தங்களது குடும்ப அட்டைகளை கெளரவ அட்டைகளாக மாற்றிக் கொள்வதற்கு இன்றுடன் காலக் கெடு முடிவடைகிறது.
தமிழகத்தில் மாத வருமானம் ரூ. 5,000 உடையோர், வருமான வரி கட்டுவோர் தங்களது குடும்ப அட்டைகளை கெளரவ அட்டைகளாக மாற்றிக் கொண்டு எச் முத்திரை குத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இதற்கான காலக் கெடு 2 முறை நீட்டிக்கப்பட்டது. இந் நிலையில் இன்றுடன் அரசு விதித்துள்ள காலக்கெடு முடிவடைகிறது. இதற்கு மேலும் காலக் கெடு வழங்கப்படாது என்றும், எச் முத்திரை குத்திக் கொள்ளாத அட்டைகள் செல்லாதவையாகி விடும் என்றும் அரசு ஏற்கனவே எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications