ஜெ. அரசை நீக்காததால் திமுக விலகியது: பா.ஜ.க.
சென்னை:
சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆரூத்ரா தரிசன நிகழ்ச்சியைப் படம் பிடித்த புகைப்படக்காரர்கள்,செய்தியாளர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக 2 தீக்ஷிதர்களை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
வைகோ கைது விவகாரம், பொடா சட்டத்தை ரத்து செய்யாதது, தமிழை செம்மொழியாக்காமல் காலம் தாழ்த்துவதுஉள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்தும், அமைச்சரவையிலிருந்தும்விலகுவதாக திமுக 3 வாரங்களுக்கு முன்பு அறிவித்தது. இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த திமுக அமைச்சர்கள் டி.ஆர்.பாலுவும், ராஜாவும் பதவியை ராஜினாமா செய்தனர்.
இந் நிலையில் அதிமுக அரசைக் கலைக்க பா.ஜ.க. மறுத்த காரணத்தால்தான் திமுக விலகியதாக இல.கணேசன்தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2001ம் ஆண்டு ஜூன் மாதம்30ம் தேதி கைது செய்யப்பட்டார். அதற்கு அடுத்த நாள் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் பிரதமருக்கு ஒருகடிதம் எழுதினார்.
அந்தக் கடிதத்தில், தமிழக அரசை அரசியல் சட்டம் 356-வது பிரிவைப் பயன்படுத்தி டிஸ்மிஸ் செய்ய வேண்டும்என்று கோரியிருந்தார். ஆனால் அந்தக் கோரிக்கை நிறைவேறவில்லை.அரசியல் சட்டம் 356-வது பிரிவை பயன்படுத்தக் கூடாது என்பதை தனது கொள்கை என்று அடிக்கடிக் கூறிக்கொள்ளும் திமுக, தனது கட்சியின் தலைவர் கைது செய்யப்பட்டு விட்டார் என்றவுடன், அதைப் பயன்படுத்தியேஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது விநோதம்தான். அது நிறைவேறாத கோபத்தில்தான் கூட்டணியைவிட்டும் விலகியுள்ளது திமுக.
வாஜ்பாயிடம் தனது கோரிக்கை பலிக்காத காரணத்தினால்தான் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க முடிவுசெய்தார் கருணாநிதி. இல்லாவிட்டால், வாஜ்பாய்க்கும், பா.ஜ.க.வுக்கும் ஆதரவாக நாடு முழுவதும் அலை வீசும்இந்த நேரத்தில் யாராவது கூட்டணியை விட்டு விலகுவார்களா?
காங்கிரஸுடன் கை கோர்க்க நீண்ட காலத்திற்கு முன்பே ரகசியமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்கருணாநிதி. பொடா விவகாரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இப்போது கூட்டணியை விட்டுவிலகியுள்ளார்.
அது உண்மை இல்லை என்று கருணாநிதி கூறினால், பொடா சட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மதிமுக, பொடாசட்டத்தால்தான் கூட்டணியிலிருந்து விலகினோம் என்று கூறாதது ஏன்?
வாஜ்பாய் மீதும், தேசிய ஜனநாயகக் கூட்டணி மீதும் மதிமுகவுக்கு எந்த கோபமும், வருத்தமும் இல்லை. எங்கள்மீது புகார் கூற அவர்களுக்கு ஒரு காரணம் இல்லை. வைகோவை நாங்கள் நன்றாகவே கவனித்துக் கொண்டோம்என்ற திருப்தி மதிமுகவுக்கு உண்டு. கட்டாயத்தால்தான் அவர்கள் வெளியேறியுள்ளார்கள்.
இந்த நிமிடம் வரை பா.ம.க. எங்களுடன்தான் உள்ளது. தொடர்ந்து இருப்பார்கள் என்று நம்புகிறோம். அவர்களைஇழுக்க திமுக முயலலாம், ஆனால் வெளியேறுவதற்கான காரணம் பா.ம.கவிடம் இல்லை என்றார் இல.கணேசன்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications