சென்னை: கள்வன் ஆன காவலர்- மனைவியுடன் கைது!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில்,பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த காவலர் நகைக் கடை உரிமையாளரிடம்நகையைப் பறித்தார். அவரை போலீஸார் கைது செய்தனர். கணவரின் திருட்டை மறைத்து, அவர் தப்பஉதவியதாக அவரது மனைவியையும் போலீஸார் கைது செய்தனர்.

3 மாதங்களுக்கு முன்பு பணியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டவர் செளந்தரராஜன் என்ற போலீஸ்காரர்.இவர் தனது நண்பர் செல்வக்குமார் என்பவருடன் மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு நாராயணன் என்ற நகைக் கடைக்காரர் நகைகள் வாங்கிக் கொண்டு வந்தார். அவரை வழிமறித்தசெளந்தரராஜனும், செல்வக்குமாரும் திருட்டு நகைகளுடன் வருகிறீர்களா என்று கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால்தான் முறையாகவே நகை வாங்கி வருவதாக நாராயணன் கூறியுள்ளார்.

ஆனால் அதை கேட்காத செளந்தரராஜனும், செல்வக்குமாரும், நாராயணனை ஒரு ஆட்டோவில் அமர வைத்துஎழும்பூர் காவல்துறை ஆணையர் அலுவலக வளாகத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு ஒரு ஒதுக்குப்புறமானஇடத்திற்குக் கூட்டிச் சென்று, நகைகளைத் தந்து விடு, இல்லாவிட்டால் வழக்குப் பதிவு செய்து விடுவோம் என்றுமிரட்டியுள்ளனர்.

இறுதியில் நாராயணன் வைத்திருந்த 350 கிராம் நகையை பறித்துக் கொண்டு சென்று விட்டனர். அதிர்ச்சியடைந்தநாராயணன் காவல்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார்செய்தார்.

போலீஸார் செளந்தரராஜனின் வீட்டுக்கு விரைந்தனர். அங்கு அவர் இல்லை. அவரது மனைவியிடம்விசாரித்தபோது, நகை எதுவும் இல்லை என்றும் தனது கணவர் சபரிமலைக்கு சென்று விட்டதாகவும் கூறியுள்ளார்.ஆனால் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியபோது, அவர் சேலத்தில் இருப்பதாக தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார் சேலத்திற்கு விரைந்து சென்று செளந்தரராஜனைப் பிடித்தனர். தவறான தகவல் தந்துபோலீஸாரை அலைக்கழித்ததற்காக செளந்தரராஜனின் மனைவியும் கைது செய்யப்பட்டார். செல்வக்குமாருக்குவலை வீசப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+