மாமாவுடன் பிரச்சனை: சொந்த ஊரை காலி செய்தார் ஜீவஜோதி
வேதாரண்யம்:
பிரபல சரவணபவன் ஒட்டல் அதிபர் ராஜகோபால் வழக்கில் தொடர்புடைய ஜீவஜோதி தனது சொந்த ஊரானதேத்தாக்குடியைக் காலி செய்து, தஞ்சாவூரில் குடியேறியுள்ளார். அங்கு இவருக்கு மன்னார்குடி குடும்பத்தைச்சேர்ந்த முக்கிய நபர் பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிகிறது.
தனது கணவர் பிரின்ஸ் சாந்தக்குமாரைக் கொலை செய்ததாக ஜீவஜோதி கூறிய புகாரையடுத்து, ராஜகோபால் மீதுவழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. ஜீவஜோதி தனது சொந்த ஊரானநாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள தேத்தாக்குடியில் வசித்து வந்தார்.
அண்மையில் ஜீவஜோதியின் தாய்மாமன் தசமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ஜீவஜோதி ஏராளமானபணத்தை ராஜகோபாலிடம் இருந்து பெற்றதாகக் கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். அதோடு வேதாரண்யம்பகுதியிலுள்ள ஒரு பஸ் அதிபரிடம் பெரும் பணத்தைக் கொடுத்து வைத்துள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த வழக்கில் ராஜகோபாலுக்கு ஆதரவாக தசமணி நிலை எடுத்துள்ளார். இதையடுத்து ஜீவஜோதியை, போயஸ்தோட்டத்தின் நம்பர் டூவின் சகோதரர் தஞ்சாவூருக்கு குடிபெயர வைத்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
தேத்தாக்குடியிலுள்ள வீட்டை காலி செய்துவிட்ட ஜீவஜோதி, தஞ்சை கிருஷ்ணா நகர் திருவள்ளுவர் தெருவிலுள்ளஒரு வீட்டிற்கு தனது தாய் மற்றும் தம்பியுடன் இரவோடு இரவாக குடிபெயர்ந்துள்ளார்.
அதை உறுதிப்படுத்தும் விதமாக, இதுவரை அவரது தேத்தாக்குடி வீட்டின் முன்பு காவலுக்கு இருந்த போலீஸாரும்இப்போது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications