13 இடங்களில் திமுக போட்டி: காங்கிரசுக்கு 12 சீட்!
சென்னை:
திமுக தலைமையில் தமிழகத்தில் அமையவுள்ள புதிய கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 12 இடங்கள்ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது.
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளில் திமுக 13 சீட்களில் போட்டியிட முடிவுசெய்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 11 சீட்கள் ஒதுக்கப்படலாம். பாமகவுக்கு 6 இடங்களும் மதிமுகவுக்கு 4 சீட்களும்தரப்படலாம் என்று தெரிகிறது.
இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகளும், இந்திய தேசிய லீக், இந்திய தேசிய முஸ்லீம் லீக் ஆகியகட்சிகளுக்கு தலா 1 தொகுதியும் வழங்கப்படலாம்.
காங்கிரஸ் சார்பில் முதல் கட்டமாக 15 இடங்கள் கோரப்பட்டுள்ளதாகவும், ஆனால், 12 தான் தர முடியும் என திமுககூறிவிட்டதாகவும் தெரிகிறது.
பா.ம.க. கூடுதலாக ஒரு இடம் கேட்டால், காங்கிரசுக்குத் தருவதில் ஒரு இடத்தை திமுக குறைக்கும் எனவும்அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் மதிமுக இன்னொரு இடம் கேட்டால், திமுக தனதுஎண்ணிக்கையை 12 ஆக்கிக் கொண்டு மதிமுகவுக்கு கூடுதல் சீட் தரும் என்கின்றனர்.
கூட்டணியை உருவாக்கி, அதற்குத் தலைமை வகித்தாலும், திமுகவால் 13 இடங்களுக்கு மேல் போட்டியிட முடியாதநிலையே நிலவுகிறது.
இதற்கிடையே முஸ்லீம் கட்சிகளில் ஒரு கட்சிக்கு மட்டும் இடம் தந்துவிட்டு, இன்னொரு கட்சி சொல்லும் இடத்தில்திமுக சார்பிலேயே முஸ்லீம் வேட்பாளரை நிறுத்தவும் வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் திமுகவுக்கு கூடுதலாகஇன்னொரு இடம் கிடைக்கும்.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications