மேய்ச்சல் மைதானங்கள்...
- தஞ்சையிலிருந்து சு.தா. அறிவழகன்
![]() |
| கருகி வரும் (வட்டத்திற்குள்) சம்பா பயிரை சோகத்துடன் காட்டும் விவசாயி |
மொத்தத் தமிழகமும் தித்திக்கும் பொங்கலை சுவைக்க காத்துக் கிடக்கும் நிலையில், காவிரித் தாயின் கருணைக்காகஏங்கிக் கிடக்கிறது ஒரு பகுதி தமிழ்நாடு.
தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் என காவிரி டெல்டா பகுதியில் எங்கு பார்த்தாலும் சோகம்தான். ஒரு பக்கம்கருகிக் கொண்டிருக்கும் பயிர்கள். அதைக் காப்பாற்ற முடியாத இயலாமையுடன் விவசாயிகள்.
மழை பெய்யாதா, காவிரியில் தண்ணீர் வரவே வராதா என்ற ஏக்க விழிகளுடன் அந்த ஏழை விவசாயிகள்குடிசைகளின் முன் விரக்தியில் வீழ்ந்திருக்கிறார்கள்.
கடந்த ஆண்டும் காவிரி பொய்த்தது, வானம் மழை தர மறுத்தது, அரசியல் விளையாடியது, அதனால்பயிர்களோடு சேர்ந்து உயிர் விட்டனர் பல விவசாயிகள். இந்த ஆண்டும் அந்த சோகம் தொடர்கிறது.
மூன்று போகம் விளைவித்த பூமி, தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்ற பழம் பெருமை எல்லாம் இன்று காலிப்பெருங்காய டப்பாவாகிவிட்டது. கடன் வாங்கிச் சாப்பிடுவது, பொருள்களை எல்லாம் அடமானம் வைத்துநாட்களை ஓட்டுவது, அரசு கொடுக்கும் மானிய அரிசியை வாங்கி சமைப்பது என்ற அவல நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளார்கள் காவிரி டெல்டா விவசாயிகள்.
பொங்கலைக் கொண்டாட வசதியில்லாவிட்டாலும் மாடுகளுக்காவது கொம்புகளில் வர்ணம் பூசி அழகு பார்க்கஆசைப்பட்டாலும், அதற்கும் கூட காசில்லாத அவலம். என்னதான் செய்வார்கள் இந்த அப்பாவி விவசாயிகள்.
பொங்கலைக் கொண்டாட வேண்டிய உழவர்கள் விளைச்சல் இல்லாததால் மன உளைச்சலில் உழன்றுகொண்டுள்ளனர்.
என்று நமது துயர்கள் தீரும்? காவிரி இனிமேல் வரவே மாட்டாளா? ஒரு போகம் கூட இனிமேல்சாத்தியமில்லையா? என்ற அச்சக் கேள்விகள் இவர்களை அலைக்கழித்து வருகின்றன.
அரசியலும், அரசியல்வாதிகளும் ஆடும் சதிராட்டத்தில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறார்கள் இந்த காவிரித்தாயின் புதல்வர்கள். இவர்களது துயரைப் புரிந்து கொள்ள யாருக்கும் நேரமில்லை.
மீண்டும் பொற்காலம் திரும்ப வருமா? தஞ்சைத் தரணியிலும் புன்னகை தவழுமா என்பதற்கு காலம் தான் பதில் தரவேண்டும். பொங்கலை சுவைக்கும் முன், காவிரி விவசாயிகளின் கண்ணீரை ஒரு கணம் நினைத்துப் பார்ப்போம்.அதுதான் நாம் அந்த அப்பாவி விவசாயிகளுக்கு செய்யும் நன்றிக் கடனாக இருக்கும்.
ஏழை விவசாயிகளுக்கு வாழ்வு கிடைக்க, இந்த தைத் திங்களாவது ஒரு வழி காட்ட வேண்டுமாய் இயற்கையைமனமுருகி வேண்டுவோம்!
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!













Click it and Unblock the Notifications