திமுக மாநாடு பிப். 28ம் தேதிக்கு மாற்றம்: சோனியா பங்கேற்பு?
சென்னை:
மக்களவைத் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படுவதையொட்டி, திமுகவின் தென்மண்டல மாநாடு அறிவிக்கப்பட்டதேதிக்கு முன்னதாக பிப்ரவரி 28ம் தேதி தொடங்குகிறது.
இத் தகவல், மாநாட்டின் வரவேற்புக் குழு தலைவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் திமுக தலைவர் கருணாநிதி திமுகவின் தென்மண்டல மாநாடு மார்ச் 5ம் தேதி தொடங்கி 3 நாட்கள்நடைபெறும் என்று அறிவித்திருந்தார். இந் நிலையில் மக்களவைக்கு தேர்தல் முன்கூட்டி நடத்தப்படுவதாக பா.ஜ.கஅறிவித்தது.
இதனையடுத்து கருணாநிதி நிருபர்களிடம் பேசுகையில், திமுக மாநாட்டுத் தேதிகள் மாற்றிமைக்கப்படும் என்றுதெரிவித்திருந்தார்.
இந் நிலையில், ராமச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாநாடு பிப்ரவரி 28ம் தேதி தொடங்கும். 3 நாள்நடைபெறுவதாக இருந்த மாநாடு இப்போது 2 நாட்களில் நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும்இந்த மாநாட்டிலேயே திமுகவின் தேர்தல் அறிக்கையையும், வேட்பாளர்கள் பட்டியலையும் கருணாநிதிஅறிவிப்பார் என்று தெரிகிறது.
இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொள்வார் என்று அறிவாலயத்தில் பேச்சுநிலவுகிறது.
பிரசாரத்திற்கு பிரியங்கா வருகை:
இந் நிலையில், நாடாளுமன்றத் தொகுதி உடன்பாடு குறித்து கருணாநிதியும், சோனியா காந்தியும் பேசி முடிவுசெய்வார்கள் என்று காங்கிரஸ் முன்னாள் செயல் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் தொகுதிகள் பங்கீடு தொடர்பாக திமுக தலைவர்கருணாநிதியும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் நேரில் பேசி முடிவு செய்வார்கள். காங்கிரஸ் கட்சியின்கெளரவம் குறையாத வகையில் தொகுதிகளை திமுக ஒதுக்கும்.
தமிழகத்தில் திமுக தலைமையில் உருவாகியுள்ள முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை, புதியதமிழகம், விடுதலைச் சிறுத்தைகள், மக்கள் தமிழ் தேசம் ஆகிய கட்சிகளும் சேர வேண்டும்.
முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்காக சோனியா காந்தியும், பிரியங்காவும் தமிழகத்தில் பிரசாரம் செய்யவருவார்கள் என்றார்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications