சிவகங்கையில் ப.சிதம்பரம் போட்டி
சென்னை:
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து, காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்ப.சிதம்பரம் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடப் போகிறார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றது காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை.வள்ளல் பெருமான் மற்றும் புரசை ரங்கநாதன் ஆகியோர் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் எம்.எல்.ஏக்களாகஉள்ளனர்.
கடந்த ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தது. இதைத் தொடர்ந்து ப.சிதம்பரத்தையும்காங்கிரஸில் இணையுமாறு பல்வேறு காங்கிரஸ் தலைவர்களும் கோரி வந்தனர். இந்தப் பின்னணியில் சமீபகாலத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சில முறை சந்தித்துப் பேசினார் ப.சிதம்பரம். இருப்பினும்காங்கிரஸுடன் இணைவதாக இல்லை, காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து செயல்படுவோம் என்று கூறினார்ப.சிதம்பரம்.
இந் நிலையில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியிலிருந்து ப.சிதம்பரம்போட்டியிடலாம் என்று தெரிகிறது. திமுக-காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளராக அவர் போட்டியிடக் கூடும்என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி வேட்பளராக போட்டியிட்டாலும்கூட அவர் காங்கிரஸ் கட்சியின் கைசின்னத்திலேயே போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ப.சிதம்பரத்திற்கு ஒதுக்கப்படும் தொகுதி, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கையில்சேராது என்றும் காங்கிரஸ் கட்சிக்கு திமுக தரப்பு உறுதி அளித்துள்ளதாகவும், ப.சிதம்பரத்திற்கு தொகுதிஒதுக்குமாறு சோனியா காந்தியே கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா!












Click it and Unblock the Notifications