என்.டி.ஆர். பேத்தி தற்கொலை வழக்கு: கணவனுக்கு 10 ஆண்டு கடுங்காவல்
சென்னை:
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் பேத்தி குதினி தற்கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டிருந்த அவரது கணவர் ஸ்ரீநாத் பிரசாத்திற்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி சென்னைபெண்கள் நீதிமன்றம் உத்தரவிட்டது.
என்.டி.ராமாராவின் மூத்த மகன் ஜெயகிருஷ்ணா. இவரது மகள் குதினி. இவருக்கு, நியூயார்க்கில் வியாபாரம்செய்து வந்த ஸ்ரீநாத் பிரசாத்துக்கும் கடந்த 1993ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது பிரசாத்துக்குரூ. 50 லட்சம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.
திருமணத்திற்குப் பின் குதினி கணவருடன் நியூயார்க் சென்று விட்டார். 1998ம் ஆண்டுவாக்கில் அமெரிக்காவில்வசித்து வந்த தன்யா கபூர் என்ற பெண்ணுடன் ஸ்ரீநாத்திற்கு தொடர்பு ஏற்பட்டது. இது 1999ம்ஆண்டுவாக்கில்தான் குதினிக்குத் தெரியவந்தது.
இதையடுத்து அவர் தற்கொலைக்கு முயற்சி செய்தார். ஆனால் அக்கம் பக்கத்தில் உள்ளோர் அவரைக் காப்பாற்றிவிட்டனர். இந் நிலையில் ஸ்ரீநாத்தின் வியாபாரத்தில் பெரும் சரிவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தனதுமாமனாரிடம் ரூ. 10 லட்சம் நன்கொடையாகவும், ரூ. 40 லட்சம் கடனாகவும் கொடுக்கும்படி வற்புறுத்தியுள்ளார்.அவர் தர மறுத்தார்.
இந் நிலையில் வரதட்சணை கேட்டு குதினியைக் கொடுமைப்படுத்தத் தொடங்கினார் ஸ்ரீநாத். இதனால் வெறுப்புற்றஅவர் பணம் வாங்கிக் கொண்டு வருவதாகக் கூறி விட்டு சென்னைக்கு வந்தார். கடந்த 2000மாவது ஆண்டுஅக்டோபர் மாதம் சென்னை வந்த அவர் விஷம் குடித்தார். 29ம் தேதி இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீநாத், அவரது தந்தை முரளிகிருஷ்ணா, தாயார் கிருகலட்சுமி ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி விமலா, குதினியை ஸ்ரீநாத் கொடூரமாக கொடுமைப்படுத்தியுள்ளதுஅவரது கடிதங்கள் மூலம் தெரிய வருகிறது.
இத்தனை கொடுமைகள் செய்தும் கூட கணவருடன் வாழவே விரும்பியுள்ளார் குதினி. எனவே ஸ்ரீநாத்திற்குகருணை காட்ட முடியாது. அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ. 2 லட்சம் அபராதமும்விதிக்கப்படுகிறது. இந்த அபராதத் தொகை குதினியின் பெற்றோர் மற்றும் 2 குழந்தைகளுக்கு இழப்பீடாகவழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தார். ஸ்ரீநாத்தின் பெற்றோர்கள் விடுவிக்கப்பட்டனர்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications