சரவண பவன் ராஜகோபால் வழக்கு: அரசு தரப்பு சாட்சி திடீர் பல்டி!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பிரபல ஹோட்டல் அதிபர் சரவண பவன் அதிபர் ராஜகோபால் மீதான வழக்கில், ஜீவஜோதியின் கணவர்சாந்தகுமாரின் அண்ணன், கொடைக்கானல் மலையில் பிணமாகிக் கிடந்தது தனது தம்பிதானா என்று தெரியாதுஎன்று சாட்சியம் அளித்துள்ளார்.

ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ராஜகோபால் முக்கியக் குற்றவாளியாக உள்ளார்.இந்த வழக்கின் சாட்சிகள் விசாரணை பூந்தமல்லியில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தற்போது நடந்துவருகிறது.

சாந்தகுமாரின் அண்ணன் விக்டர் சாட்சியம் அளித்தார். இவரது சாட்சிதான் ராஜகோபாலுக்கு எதிரான முக்கியசாட்சியாக கருதப்பட்டு வந்தது. ஆனால் கொடைக்கானல் மலையில் பிணமாகிக் கிடந்தது தனது தம்பிதானா என்றுதனக்கு சரியாகத் தெரியவில்லை என்று விக்டர் கூறியுள்ளார்.

விக்டரின் சாட்சியம்: கொடைக்கானல் மலையில் கண்டுபிடிக்கப்பட்டு கொண்டு வரப்பட்ட உடல் எனது தம்பியின்உடல்தானா என்பது எனக்கு சரியாகத் தெரியவில்லை. பிணத்தின் முகம் சிதைந்தும், உடல் சிதைந்தும் இருந்தகாரணத்தால் அது எனது தம்பிதான் என்று என்னால் உறுதியாகக் கூற முடியவில்லை.

தனது கல்லூரிப் படிப்பு வரை சாந்தகுமார் என்னுடன்தான் இருந்தார். அதன் பிறகு அவர் சென்னை சென்றுவிட்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது மனைவியுடன் அவர் எனது வீட்டுக்குத் திரும்பினார். எனதுதம்பியின் காதல் திருமணத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எனது வீட்டுக்கு வந்து விட்டு திரும்பிய சிலநாட்களிலேயே எனது தம்பி கொலை செய்யப்பட்டு விட்டதாக செய்தித்தாள்களில் பார்த்தேன்.

2001ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி போலீஸார் என்னைக் கொடைக்கானலுக்கு அழைத்துச் சென்றனர். எனதுமுன்னிலையில் அங்கு உடல் எடுக்கப்பட்டது. அப்போது ஜீவஜோதியையும் அவரது தாயாரையும் அங்குபார்த்தேன்.

பின்னர் போலீஸார் சில போட்டோக்களைக் காட்டி, இதில் எனது தம்பியின் உடலுடன் ஏதாவது ஒத்து வருகிறதாஎன்று கேட்டனர். பின்னர் தாசில்தார் என்னிடம் விசாரணை நடத்தினார். அதன் பிறகு ஒரு பேப்பரில் என்னிடம்கையெழுத்து வாங்கினார்கள். அதில் என்ன எழுதியிருந்தது என்று நான் படித்துப் பார்க்கவில்லை என்றார்.

அப்போது குறுக்கிட்ட அரசு வழக்கறிஞர் வீரராகவன், அண்ணாச்சியிடம் பெட்டி வாங்கிதகொண்டு, சாட்சி தனதுசாட்சியத்தை மாற்றிச் சொல்கிறார். எனவே அவரை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்குமாறு கோரினார்.அப்போது ராஜகோபால் எழுந்து, மறுப்பு தெரிவித்தார். அதனையடுத்து குறுக்கு விசாரணைக்கு நீதிபதி அனுமதிதரவே, விக்டரிடம், வீரராகவன் குறுக்கு விசாரணை செய்தார். அப்போது, தனது தம்பியின் உடலில் மச்சம்இருந்தது தொடர்பாக தான் எந்த வாக்குமூலமும் கொடுக்கவில்லை என்று தெரிவித்தார் விக்டர்.

இதைத் தொடர்ந்து ஹோட்டல் ஆர்யாவில் வரவேற்பாளராக இருக்கும் வரதராஜன் சாட்சியம் அளிக்கையில், இந்தவழக்கு குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் அடிக்கடி எங்களதுஹோட்டலுக்கு வருவார். 2 ஆண்டுகளுக்கு முன்பு அசோக் நகரைச் சேர்ந்த தாஸ் என்பவரது பெயரில்ராஜகோபால் ஒரு அறையை புக் செய்தார் என்றார்.

பின்னர் இந்த வழக்கு வருகிற 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் முதலில் அரசு தரப்பு சாட்சியான ஜீவஜோதியின் தாய்மாமா தசமணி, நீதிமன்றத்தில் தனதுசாட்சியத்தை மாற்றிக் கூறினார். இப்போதும் சாந்தக்குமாரின் அண்ணன் விக்டரும் அதேபோல் செய்திருப்பதுவழக்கின் போக்கையே திசை திருப்பியுள்ளது. அதேநேரத்தில் ஒவ்வொரு முறை நீதிமன்றத்திற்கு வரும்போதும்,இந்த வழக்கிலிருந்து கட்டாயம் விடுதலை ஆவேன் என்று ராஜகோபால் நிருபர்களிடம் கூறிவருவதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+