ஜெ. அமைச்சரவை 15-வது முறையாக மாற்றம்: பழையவருக்கு மீண்டும் பதவி
சென்னை:
முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
2வது முறையாக ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றபோது அவரது அமைச்சரவையில் இடம் பெற்றவர்சி.வி.சண்முகம். அப்போது அவருக்கு வணிகவரித்துறை பொறுப்பு தரப்பட்டது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புப் படிஜெயலலிதா பதவி விலகி ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றபோதும், சண்முகம்அமைச்சராக நீடித்தார். அதன் பிறகு மீண்டும் ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றபோது சி.வி.சண்முகத்தைநீக்கினார்.
இந் நிலையில் அவரை இன்று மீண்டும் தனது அமைச்சரவையில் சேர்த்துள்ளார் ஜெயலலிதா. திண்டிவனத்தைச்சேர்ந்த அவருக்கு தொழிலாளர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் நாளை மறுதினம் (23ம் தேதி) சண்முகம்பதவியேற்க உள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் தொழிலாளர்துறை அமைச்சராக இருந்த வ.து.நடராஜன் நீக்கப்பட்டார்.இதையடுத்து அப் பொறுப்பை போக்குவரத்துத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தான் கூடுதலாக கவனித்துவந்தார். இப்போது சண்முகம் நியமிக்கப்பட்டுவிட்டதால், இனி போக்குவரத்து அமைச்சராக மட்டும் விஸ்வநாதன்நீடிப்பார்.
மேலும் இதுவரை விவசாயத்துறை அமைச்சராக இருந்த ஜீவானந்தத்திடம் இருந்து அந்தப் பொறுப்பைப்பறித்துள்ள ஜெயலலிதா, அவருக்கு டம்மி பதவியான பிற்பட்டோர் நலத்துறையை வழங்கியுள்ளார்.
இதுவரை பிற்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த அன்னாவிக்கு இப்போது விவசாயத்துறைவழங்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் நலத்துறைக்கு அன்வர்ராஜாவும், வ.து.நடராஜனும் மாற்றி, மாற்றி இரண்டு முறை ஷட்டில்செய்யப்பட்டனர். இப்போது இந்த இருவருக்கும் பதிலாக சண்முகத்தைப் போட்டுள்ளார் ஜெயலலிதா.
நாளை மறுதினம் பகல் 12.45 மணிக்கு ஆளுனர் மாளிகையில், சண்முகம் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்என்று ஆளுனர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுவது இது 15-வது முறையாகும்.இதன்மூலம் அமைச்சர்களின் எண்ணிக்கை 25 ஆகியுள்ளது.
-
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
விஜய்க்கு பவுன்சர் பாதுகாப்பு ஏன்? எம்ஜிஆர் 5 பேரை வச்சிருந்தாரே! அதிமுக இன்பதுரையை மடக்கிய சரவணன் -
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு! -
அதிகாலை 7 மணிக்குள் கள ஆய்வு பண்ணுங்க.. விஜய் அசத்தல்! மாநகராட்சி ஆணையர்களுக்கு அரசு உத்தரவு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு












Click it and Unblock the Notifications