கூட்டணி அரசியல்தான் "பெஸ்ட்": ப.சிதம்பரம்
கோவை:
இந்தியாவுக்கு கூட்டணி அரசியல்தான் சிறந்தது. இனிமேல் எதிர்காலத்தில் மத்தியில் கூட்டணி ஆட்சிதான் நடக்கும், தனிப்பட்டஎந்தக் கட்சிக்கும் இனிமேல் தனிப் பெரும்பான்மை பலம் கிடைக்க வாய்ப்பே இல்லை என்று காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைபொதுச் செயலாளர் ப.சிதம்பரம் கூறினார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தற்போது நாடு முழுவதும் ஏற்பட்டு வரும் அரசியல் மாற்றங்கள்,ஜனநாயக அரசியல் முதிர்ச்சியையே காட்டுகிறது. இந்தியாவில் இனிமேல் கூட்டணி அரசியல்தான் சாத்தியமாகும்,அதுதான்நமக்கு சிறந்ததும் கூட.
தனிப்பட்ட கட்சி எதற்கும் இனிமேல் மத்தியில் பெரும்பான்மை கிடைக்காது. கூட்டணி அரசினால் மட்டுமே 5 ஆண்டு காலம்முழுமையாக ஆட்சி செய்ய முடியும்.
கூட்டணிகள் ஏற்படுவதையும், கூட்டணிகளில் மாற்றங்கள் ஏற்படுவதையும் சந்தர்ப்பவாதமாக மக்கள் நினைக்கக் கூடாது.நமக்குச் சரியான கூட்டணி எது என்பதைப் பார்த்து வாக்களிக்க மக்கள் முன்வர வேண்டும்.
கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கூட்டணிக் கட்சிகள் கூட்டணிகளை மாற்றுவது சாதாரணமான ஒன்று. அரசு அமைப்பதற்காககூட்டணிகள் மாறும் கட்சிகளும் அங்கு உண்டு. இது இயற்கையான ஒன்றுதான்.
தேசிய அளவில் பா.ஜ.க, காங்கிரஸ் தலைமைகளில் இரண்டே இரண்டு கூட்டணிகள் மட்டுமே இருக்க வேண்டும். பா.ஜ.க. முதன்முறையாக ஆட்சிக்கு வந்தபோது 13 நாள் மட்டுமே பதவி வகித்தது. அடுத்த முறை வந்தபோது 13 மாதங்கள் ஆட்சி நடத்தியது.இப்போது 5 ஆண்டு காலத்தை முழுமையாகப் பூர்த்தி செய்துள்ளது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக்கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும் 5 ஆண்டு பதவிக் காலத்தை முழுமையாக பூர்த்தி செய்யும்என்றார் ப.சிதம்பரம்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications