திமுக கூட்டணியில் திருமாவளவன்: முஸ்லீம் லீக்குக்கு வேலூர் தொகுதி
சென்னை:
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு திமுக கூட்டணியில் இணைய முன் வந்துள்ளதாகத் தெரிகிறது. அதே போல கூட்டணியில்இணைந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக்குக்கு வேலூர் மக்களவைத் தொகுதியை திமுக வழங்கியுள்ளது.
கருணாநிதியை இன்று, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் காதல் மொய்தீன் சந்தித்துப் பேசினார். அப்போதுஅந்தக் கட்சிக்கு வேலூர் தொகுதியை வழங்குவதாக கருணாநிதி அறிவித்தார்.
இதனால் பா.ம.கவுக்கு வேலூர் அல்லது அரக்கோணம் என்று வழங்கப்பட்ட சாய்ஸ் சுருங்கிவிட்டது. முஸ்லீம் லீக்குக்கு வேலூர்போய்விட்டதால் அரக்கோணத்தைத் தான் பா.ம.க. வைத்துக் கொள்ள வேண்டும்.
இதற்கிடையே, விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவனும் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். முதலில்விடுதலை சிறுத்தைகள் மற்றும் புதிய தமிழகம் ஆகியவை கூட்டணியில் இணைந்தாலும் இடங்கள் கொடுத்த முடியாது என திமுககூறி வந்தது. இதையடுத்து திமுகவுக்கு எதிராக கடந்த சில நாட்களாக மிகக் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்து வந்தார்திருமாவளவன்.
புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியுடன் இணைந்து தனித்து போட்டியிடுவது குறித்தும் தனது கட்சியினருடன்ஆலோசனை நடத்தி வந்தார். இந் நிலையில் அவரை அதிமுக கூட்டணிக்கு இழுக்கவும் முயற்சிகள் நடந்தன.
இந் நிலையில் திருமாவளவனிடம் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் ரகசியமாய் பேச்சு நடத்தி அவருக்கு தூண்டில்போட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து திமுக தலைவர் கருணாநிதியை திருமாவளவன் இன்று சந்தித்துப் பேசினார்.
தொகுதி ஒதுக்கீடு குறித்து எதுவும் இறுதி செய்யப்படாவிட்டாலும், கடைசியில் திருமாவளவனுக்கு கடலூர் தொகுதிஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது. அதே போல டாக்டர் கிருஷ்ணசாமிக்கு தென்காசி தொகுதி தரப்படலாம் என்றும்கூறப்படுகிறது.
அதே போல எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பன் இன்று தனது கட்சியின் எம்.பி. ஜகத்ரட்சகனுடன் வந்துகருணாநிதியை சந்தித்தார். கடந்தமுறை ஜகத்ரட்சகன் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார் என்பதுகுறிப்பிடத்தக்கது. இம்முறையும் அவருக்கு சீட் தரப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
முஸ்லீம் கட்சியுடன் தலித் கட்சிகளுக்கும் இரு இடங்கள் தர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதால் காங்கிரசுக்கு தர இருந்த 12இடங்களை திமுக 10 ஆகக் குறைத்துவிடும் என்று தெரிகிறது.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications