பா.ம.கவுக்கு திண்டிவனம்: மதிமுக கோபமா?
சென்னை:
மதிமுக தலைவர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டுத் தான் திண்டிவனம் தொகுதியை பாட்டாளி மக்கள் கட்சிக்கு வழங்கியதாகதிமுக கூறியுள்ளது.
செஞ்சி ராமச்சந்திரன் போட்டியிட்டு வென்ற இந்தத் தொகுதியை பா.ம.கவுக்குக் கொடுத்துவிட்டதால் மதிமுக மனஸ்தாபத்தில்இருப்பதாக செய்திகள் கிளம்பியுள்ளன.
நேற்று பா.ம.கவுக்கு திண்டிவனம் உள்பட 6 இடங்களை திமுக ஒதுக்கியது. இதைத் தொடர்ந்து நேற்றிரவு திமுக தலைவர்கருணாநிதியை மதிமுகவின் தேர்தல் குழுவினரான இல.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், மு.கண்ணப்பன் உள்ளிட்டோர் சந்தித்துப்பேசினர்.
அப்போது தென் சென்னை, சிவகாசி, ஈரோடு, திருச்சி, விழுப்புரம் ஆகிய 5 தொகுதிகளை மதிமுகவினர் கோரியதாகத் தெரிகிறது.இதில் நான்கைத் தர கருணாநிதி முன் வந்தார்.
திண்டிவனத்தை பா.ம.கவுக்குத் தந்துவிட்டதால், செஞ்சி ராமச்சந்திரன் போட்டியிடுவதற்கு வசதியாக வன்னியர்கள் நிறைந்தவிழுப்புரம் தொகுதியை மதிமுகவினர் கோரினர். அதற்கு கருணாநிதி ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து வைகோவுடன் ஆலோசனை நடத்திய பின் மீண்டும் வரும் 27ம் தேதி கருணாநிதியை சந்திக்க மதிமுக தலைவர்கள்முடிவு செய்துள்ளனர்.
இந் நிலையில் இன்று கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக கூட்டணிக்கு பா.ம.க. வந்துவிட்டதை ஜீரணிக்க முடியாத சில சக்திகள் தான் திண்டிவனம் தொகுதியை வைத்து மதிமுக-திமுக இடையே புகைச்சலைக் கிளப்ப முடியாதா என்று முயல்கின்றன. புலம்பித் தவிக்கின்றன.
தம்பி செஞ்சி ராமச்சந்திரனுக்குத் தெரியாமல் திண்டிவனம் தொகுதியை பா.ம.கவுக்கு நான் கொடுத்துவிட்டதாக சிலபத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன. மதிமுகவின் எல்.கணேசன், செஞ்சி ஆகியோருடன் பேசி, முழு ஒப்புதல்பெற்றுவிட்டுத் தான் பா.ம.கவுக்கு நான் அந்தத் தொகுதியை ஒதுக்கினேன்.
எங்கள் கூட்டணியின் ஒரே எண்ணம் மதவாதத்தை முறியடிப்பதே. எந்தவொரு மதத்தினருக்கும் சார்பில்லாமல், எம்மதமும்சம்மதமே என்ற மனப்பான்மையுடன், பெரும்பான்மையினரும் சிறுபான்மையினரும் சகோதர உணர்வுடன் உறவாடி மகிழ்ந்திடும்வகையில் நல்லதொரு சூழலை உருவாக்க முயல்வது தான் இந்தக் கூட்டணியின் ஒரே குறிக்கோள் என்று கூறியுள்ளார்.
அதே போல பாண்டிச்சேரியை பாட்டாளி மக்கள் கட்சிக்கு வழங்கியதால் காங்கிரஸ் எரிச்சலில் உள்ளதாகவும் கூறப்பட்டது.ஆனால், பாண்டிச்சேரியின் ஒரே ஒரு எம்.பி. தொகுதிக்கு முதல்வர் ராமசாமியின் ஆதரவாளர்கள் மற்றும் கண்ணனின்ஆதரவாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருவதால், அதை பா.ம.கவுக்கே தந்துவிடுமாறு டெல்லி காங்கிரஸ் தலைமைதான் திமுகவுக்கு கோரிக்கை வைத்ததாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications